வணக்கம் நண்பர்களே!!!... எல்லாரும் எப்படி இருக்கீங்க?... அம்மா வேற அழகன கண்ணத்தில அடிச்சுட்டாங்க..எதுக்கு? அடிச்சாங்கனு வேற தெரியல? எப்ப அடிச்சாங்கனு கேக்குறீங்களா?நேத்துதான்..... மறந்து போச்சுன்னா ... பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7... இதுல போய்ட்டு பாத்துட்டு இருங்க... நான் போய் என்ன ஆச்சுன்னு பாக்குறேன்.....
அழகன்: (நீங்க முடியாத மன வேதனையுடன் அழகன்)
... அம்மா!!!!!
அழகன் அம்மா: எதுக்கு?... அவள அப்படி பண்ண!!!.... அவ சொல்லலன்னா நீ ஆசப்பட்டத படிக்க எடுத்துருக்கவே முடியாது!!....
அழகன்: அம்மா!!.... என்ன சொல்லுறீங்க?.... அப்படியா?.... ஐயோ!.. இது தெரியாம அவள நான் கண்டபடி பேசிட்டனே!!!... இப்ப நான் போய் அவளை சமாதானம் பண்ணா ஓவரா பண்ணுவாலே!!!....
அழகன் அம்மா: அந்த குழந்தைய சமாதானம் பண்ணுன அப்புறம் தான் உனக்கு சாப்பாடு!!.... இல்லனா இன்னைக்கு பட்டினிதான் பாத்துக்கோ!!.....
(*அழகனின் மனசு: அப்போ! இன்னைக்கு எனக்கு சாப்பாடு கிடைக்காது போலயே!!!*)
அழகன் அம்மா: போ... போய் அந்த புள்ளைய பாரு என்ன பண்றான்னு.....
அழகன்: ரொம்ப சாரிமா!!....
அழகன் அம்மா: என்ட்ட சாரி கேட்டு என்ன புரயோஜனம்..... அங்க போய் கேளு....போ!!....
அழகன்: சரிமா!!... நான் போயிட்டு வரேன்....
(அழகன், அழகியைத் தேடிச் செல்கிறான்..... அவள் *ஒரு அரளிப் பூந்தோட்டத்தில் இருக்கும் ஒரு ஒற்றை மாமர அடியில்.... கன்னத்தில் ஒரு கையை சாய்த்து வைத்தவாறு..... அருகிலிருந்த பூச்செடியில் அமர்ந்திருக்கும் வண்ணத்துப்பூச்சியின் அழகை ரசித்தவாறு.... தனது வருத்தத்தை அதனிடம் கொட்டிக் கொண்டிருந்தாள்*.... உடனே அழகன் அவளைப் பார்த்து....)
அழகன்: தனது குரலை சிறிது தளர்த்தி மென்மையாக.... அழகி!!! என அழைத்தான்.....
(அவனைப் பார்த்ததும் கோபத்தில் முகத்தை திருப்பிக் கொண்டாள்.... அழகி....)
அழகன்: சாரி.... அழகி!!!....என்ன மன்னிச்சிரு....
அழகி: Excuse me.....சார்..... நீங்க யாருன்னே தெரியல..... என்கிட்ட எதுக்கு சாரிலாம் கேக்குறீங்க..... யாருன்னு தெரியாதவங்ககிட்டலாம் நான் பேசுற மாதிரி இல்ல....
அழகன்: அழகி!!.... விளையாடாத.... நான்தான் அழகன்!.. உன்னோட நண்பன்....
அழகி: ஓ ஓ ஓ ஓ..... நீங்கதான் அழகனா?....
அழகன்: ஆமா அழகி!!..... என்ன இப்படி கேக்குற??...
அழகி: நீங்கதான உங்களுக்கு புடிச்ச விஸ்காம் எடுத்து படிக்க போறீங்க??... வாழ்த்துக்கள்.... Sorry...Sorry... உங்களுக்குத்தான் என்னோட வாழ்த்துக்கள்ளாம் புடிக்காதே...!
அழகன்: ஐயோ!! போதும்.... ப்ளீஸ்!! அழகி..... என்ன மன்னிச்சிரு....
அழகி: நான்!! எவ்ளோ ஆசையா வீட்டுக்கு வந்தேன் தெரியுமாடா?.....
அழகன்: சரி அழகி....தெரியாம பண்ணிட்டேன் மன்னிச்சி தொலையும்......!
அழகி: முடியாது! முடியாது!....
அழகன்: அழகி!!!!.... நீ என்ன சொன்னாலும் நான் கேக்குறேன்..... ப்ளீஸ்.....
அழகி: அப்படியா????.... சரி!!!!..... நமக்குள்ள ஒரு டீல்... சரின்னா நாம ஃப்ரண்ட்ஸா இருக்கலாம்....
அழகன்: என்னவா இருந்தாலும் எனக்கு சம்மதமே!!!.... சொல்லு... என்ன டீல்??....
அழகி: நீ... விஷ்காம் படிச்சு முடிச்சி எடுக்கிற முதல் படத்துல நான்தான் ஹீரோயினா நடிப்பேன்....சரியா?....
அழகன்: அடிப்பாவி திருடி..... நீ சரியான ஆளு.....ம்ம்... எனக்கு அந்த டீல் ஓகே தான்..... ஆனா.... என்னோட முதல் படத்துல ஹீரோயின் ஒரு பிச்சக்காரி பரவால்லையா????....
அழகி: டேய்!!.... அழகா!!!! வர வர உனக்கு கொழுப்பு ஜாஸ்தி!!.... இரு அம்மா கிட்ட சொல்லுறேன்....
அழகன்: ஏய்!!..... நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்டி....டுமீலு.....
அழகி: நீதாண்டா டுமீலு....!!! நான் இல்ல.....
(நீ..... நான்.... என்று அழகனும், அழகியும் செல்லச் சண்டை போட்டு மகிழ்ந்தனர்.)
அப்பாடா.... ஒரு வழியா ரெண்டு பேருக்கும் இருந்த சண்ட ஓவரு.... ஆனா..... அழகனுக்கு சாப்பாடு கிடைச்சிருக்குமா???.... நமக்கு யாரு சண்ட போட்டா என்னங்க....சோறுதான முக்கியம்..... அட அழகனுக்கு அம்மா போடாமல் விட்டிருவாங்களா?? அதெல்லாம் போட்டுருப்பாங்க!! நீங்க போய் சாப்பிடுங்க மொதல்ல.....
சரி இதெல்லாம் இருக்கட்டும்!! ..... அப்போ!! .... அழகி!!! அழகனோட படிக்கலையா?..... அவ சிவில் தானே எடுக்க போறேன்னு சொன்னா!! .... என்ன பண்ணுறாலோ... சரி என்ன பண்ண போறானு நாளைக்கு பாக்கலாம்!.... மீண்டும் சில நல்ல வரிகளுடன் அடுத்த பகுதியில்....
எங்களது மற்ற படைப்புகள்:
மற்றவை:
,today story very interesting....super .....super....super 👏
ReplyDeleteNandriiiiiiiiii
Delete