அன்பு(ஆசிரியர்): ஐயா!! வயலூா் கிராமத்துக்கு எப்ப
மக்கள்: யாரப்பா!! நீ!!!
அன்பு: நான் அந்த ஊர் பள்ளியில் பணியாற்ற
வந்திருக்கும் ஆசிரியர்.
மக்கள்: 1கி.மீ போனா அந்த ஊர்
வந்துரும்...
அன்பு: ரொம்ப நன்றிங்க ஐயா!
*(அன்பு பள்ளியை வந்தடைந்தார்)*
மாணவர்கள்: வணக்கம் ஐயா!! நீங்க எங்களுக்கு எந்த பாடம் கற்று தரபோறீங்க...
அன்பு
:
தமிழ்!!!
பாடம்
கற்றுத்தரப்போறேன்....புள்ளைங்களா..,சரி புள்ளைங்களா!! நாளை பள்ளியில் சந்திப்போம்.....
*(அடுத்த நாள் பள்ளியில் அன்பு கற்றுக்
கொடுக்கும் விஷயங்கள்.)*
அன்பு: புள்ளைங்களா!! நான்
உங்களுக்கு ஒரு குட்டி தொகுப்பு பற்றிய கதையை !! சொல்லப்போறேன்.
மாணவர்கள்: ஐயா!! அது என்ன கதை
சொல்லுங்க...ரொம்ப ஆர்வமா இருக்கு....
அன்பு: புள்ளைங்களா!! நீங்க
திருக்குறள் படிச்சு இருக்கீங்களா?
மாணவர்கள்: ஐயா!! படிச்சு இருக்கோம்.
அன்பு: நான் அந்த திருக்குறளில்
இருந்து ஒரு குறளோட நன்மையின் தொகுப்பு பற்றி சொல்லாம்னு இருக்கேன்.
மாணவர்கள்:
ஐயா!! அது என்ன குறள்!!
அன்பு
:
"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று".
மாணவர்கள்: ஐயா!! நாங்க இந்த குறளிலிருந்து
என்ன கத்துக்க போறோம்?....
அன்பு: "நன்றிகடன்" மற்றும்
அதோட "மகிமையும்" தான் புள்ளைங்களா!! அறிய போறோம்.
மாணவர்கள்: ஐயா!! சொல்லுங்க கதைய
கேட்போம்...
அன்பு: நன்றியை!! நம்ம எங்களாம்
பயன்படுத்துவோம்? எப்படி எல்லாம்
பயன்படுத்துவோம்?
மாணவர்கள்: ஐயா!! நீங்களே சொல்லுங்க
அன்பு
:புள்ளைங்களா!!
நம்ம பெற்றோர்களுக்கு
"நன்றியை"!!
சொல்ல மறந்து விடுகிறோம்! அதுக்கு பதிலாக நாம் அவர்களுக்கு சுமையை தான்
கொடுக்கிறோம்....
அது
நன்றிக்கடனாக மாறாது!! அது நம்மலோட எதிர் கால வளா்ச்சியில் தான்
இருக்கிறது. அதுவே நாம் அவர்களுக்கு செய்யும் முழு நன்றிக்கடனாகும்.
அன்பு: புள்ளைங்களா!! ஒன்னு
சொல்லுறேன் கவனமா!! கேளுங்க பெற்றோர்களின் உடல் நலம் குறித்து கவனமாக இருக்க
வேண்டும். அது தான் நீங்க செய்யும் முதல் நன்றிக்கடனாகும்.
அன்பு: அடுத்தது!!! நட்பு!!!! நான்
ஏன் சொல்லுறேன்னா!! அவங்க தான் உங்களேட
எதிர்
காலத்தில் உதவி செய்பவா்கள்!! நீங்கள் அதற்கு அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும்
உதவி செய்ய வேண்டும். இதுவே நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு
செய்யும் நன்றிக்கடனாகும்.
மாணவர்கள்: ஐயா!! அடுத்தது!!
அன்பு: அடுத்தது!! விவசாயம்!!....
விவசாயி
நமக்காகவும் நம்மலோட நாட்டுகாக்கவும் இந்த மண்ணை செழிக்க வைக்குறாங்க.
நம்ம
அதற்கு செய்யும் நன்றிக்கடன் என்ன! னா!
விவசாயின்
உணர்வுகளை மதிப்பளிக்க வேண்டும்.
இயற்கையை
பேணி காக்க வேண்டும்.
மாணவர்கள்: ஐயா!! எப்படி இயற்கையை பேணி
காப்பது?
அன்பு: புள்ளைங்களா!! நிறைய மரங்களை
வளா்க்க வேண்டும் மற்றும் மரங்களை வெட்டாமல் பாதுகாக்க வேண்டும்.
இதனால்
நமக்கு மழை கிடைக்கும், நாடு செழிப்புறும்.
இப்படி
பல நன்மை கிடைக்கும்.
நாம்
செய்யும் சிறிய உதவியால்... எதிர் காலத்தில் பல மக்களின் வாழ்கையை செழிப்புற
செய்யும்....
இது
தான் நீங்க செய்யும் மிகப் பெரிய நன்றிக்கடனாகும்.
மாணவர்கள்: ஐயா!! இனி வரும் காலத்தில்
எங்கள் சமுதாயத்தை மாற்றி காட்டுவோம் நாங்கள் எங்களுடைய கடமையை சரியா செஞ்சு
காட்டுவோம்.
அன்பு: உங்கள் எதிர்காலம் உங்கள்
கையில்
புள்ளைங்களா!!
நாட்டை செழிப்புறச் செய்ய வேண்டியது உங்கள் கடமை ஆகும்.
மாணவர்கள்: ரோம்ப
நன்றி ஐயா....எங்களுக்கு இவ்வளவு அறிவுரை சொன்னதுக்கு......
No comments:
Post a Comment