காதலா! காதலா? (பகுதி 4) | Kutty Story | - Kutty Story

Comments

காதலா! காதலா? (பகுதி 4) | Kutty Story |

Share This
    அழகன் அம்மா: டேய் அழகா அந்த ட்ரெஸ்ஸ நானும் பாத்தேன் அவளுக்கு அது நல்லாதான் இருந்துச்சு... உனக்கெல்லாம் எங்கடா தம்பி தெரியப்போகுது அந்த தாவணி பாவாடை பத்திலாம்..... உங்களுக்கு தெரிஞ்சது சுடிதார்,பேண்ட்,சர்ட் அவ்வளவுதான்.......என்ன நண்பர்களே! ஒன்னும் புரியலையா? என்னடா இவ  தாவணி,பாவாட,பேண்ட் சர்ட்டுனு ஒளருரானு கேக்ககுறீங்களா..... டெய்லியும் உங்களுக்கு இதே வேலையா போச்சு.... வேலை ரொம்ப ஓவரா இருக்கோ?... எல்லாம் மறந்துறீங்க!!... சரி பகுதி-1 ... பகுதி-2.....பகுதி-3... இதுல போய்ட்டு அது என்ன டிரஸ்னு பார்த்துட்டு இருங்க எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு வரேன்....


*(அழகன் மனதிற்குள் சொல்ல துடிக்கும் ஒரு உணர்வு ...வாய் மட்டும் தான் இப்படி சொல்லுது மனசு இல்லையேமா...)*

அழகன் அம்மா: சரி தம்பி!!.. போய் தூங்கு நேரம் ஆயிருச்சு பாரு 10:30  மணி....

அழகன்: சரிம்மா.... நீங்க தூங்குங்க நானும் தூங்குறேன்..

*(அழகன் வீட்டிலுள்ள அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டது)*

(அழகன் கை தேடுதலில் மெதுவாக நகர்ந்து சென்று தனது அறையில் உள்ள வானொலியை எடுத்து ஆன் செய்து கட்டிலுக்கு சென்றான்.... எவ்வளவு சிரமப்பட்டும் தூக்கம் வரவில்லை.... சாய்ந்து படுத்தவாறே ஜன்னலை நோக்கினான்..... அந்த ஜன்னல் கம்பிகளின் நடுவே வெண்மதி வட்டமிட..... அந்த வெண்மதியின் நடுவே அழகியின் முகம்....அப்போது அந்த வானொலியில் ஒரு பாடல் கண்ணா நீ தூங்குடா.....பாடலை ரசித்தவாறே கண்களை மூடினான்....அதுக்கு அப்புறம் என்ன ஒரு தூக்கம் அந்த கரடி குட்டிக்கு....ஒரே சொர்க்க லோகம் தான்.....)

(சரி அழகனக்கே இந்த நிலைமைனா அப்ப அங்க!!!..... சீக்கிரமா வாங்க என்னாச்சுனு பாத்துட்டு வரலாம்)

அழகியோட  வீடு பழைய ஓட்டு வீடு... அதுல வெளிச்சம் உள்ளே வரனும்னு ஒரு ஓடு எடுத்துட்டு அதுக்கு பதிலாக ஒரு கண்ணாடி வைச்சுருப்பாங்க...  அதிலருந்து வர வெளிச்சம் அழகியோட கண்ண கிழிக்க.... அழகியோட மனசுல நடிகர் ஜெயம் ரவியின் வடிவில் அழகன் .....அப்போ அவ மனசுல ஒரு இன்னிசை  கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி....அழகி தன்னையறியாமல் புன்னகைத்து அதன் மயக்கத்திலேயே உறக்கக்கத்தை தொடங்கினாள்....


*(காலை விடிந்தது....அழகனின் வீட்டில் அவனது நண்பன்)*

அழகன்: டேய்............என்னடா இந்த நேரத்துல வீட்டுக்கு.........என்னய பாக்க வந்தியா?.....

நண்பன்: ஆமா.....உன்ன பாக்கத்தான் அங்க இருந்து இங்க வராங்க.......நேத்துத்தான பாத்த உன்ன.........அதுக்குள்ள என்ன ?

அழகன் : இப்புடிலாம் டேமேஜ் பண்ணாதடா பாவி..........சரி இரு... அம்மாவ வர சொல்லுறேன்.

அழகன் அம்மா : தம்பி........எப்புடி இருக்க........நல்ல இருக்கியா....வீட்டுல எல்லாரும் எப்புடி இருக்காங்க............

நண்பன் : அம்மா நல்ல இருக்கேன்............எல்லாரும் நல்லா இருக்காங்கம்மா.....

அழகன் அம்மா : சரி தம்பி.... உக்காரு காப்பி போட்டு வரேன்........

நண்பன்: அம்மா அதெல்லாம் ஏதும் வேணாம்.........நிறையா எடத்துக்கு போகணும்...........டைம் ஆயிரும்மா........

அழகன் அம்மா: அப்புடி என்ன வேல தம்பி...........

நண்பன்: அம்மா....அக்காவுக்கு வர 17 ஆம் தேதி கல்யாணம்...........வந்துருங்கமா மறக்காம.......இந்தாங்க பத்திரிக்க....

அழகன் அம்மா: ஹேய்ய்ய்........சூப்பர் தம்பி கண்டிப்பா....வரோம்...

நண்பன் : அம்மா என் பிரண்ட்ஸ் எல்லாரையும் அழைச்சுசுருக்கேன்.......அழகனையும் கூட்டி வாங்க மா பிளிஸ்...

அழகன் அம்மா : கண்டிப்பா கூட்டி வரேன் கண்ணு.........

அழகன் : செம்ம போ........நான் மொத ஆளா....நிப்பேன்....

நண்பன் : சரிங்கமா போய்ட்டு வரேன்......டேய் அழகா  வரேன் டா..........

அழகனும் அம்மாவும் : பாத்து போய்ட்டு வா...........

அழகனின் மனசு : கண்டிப்பா எல்லாரையும் கூபிட்டுருப்பான்..........அழகியும் வருவா...... ஐ..ஐ...ஜாலி.........

 *(நாட்கள் சில ஓடின )*

அழகன் : எப்போடா வரும் 17 ஆம் தேதி..........நாளே போக மாட்டிங்குது........

என்னமா பொலம்புரான் தெரியுமா இந்த அழகன்........நாளைக்கு தான் அந்த 17 ஆம் தேதி.....என்னங்க!!! அழகன் அந்த கல்யாணத்துக்கு போயிருப்பானா?இல்லையா?......அழகி அங்க வந்துருப்பாலா? இல்லையா?....ரண்டு பேரும் பாதுருப்பங்கலா? இல்லையா ? எனக்கும் ஒரே புதிரா இருக்குங்க......நாளைக்கு என்ன நடக்கும்னு நாம எப்புடி இன்னிகே சொல்லுறது... அது அந்த  கடவுள்க்கு தான் தெரியும்....சரி அடுத்த பகுதியில பாப்போம் என்ன நடக்குதுன்னு........ தொடரும் 


எங்களது மற்ற படைப்புகள்:
காதலா! காதலா?
    1. பகுதி-1              2.பகுதி-2                   3.பகுதி-3

மற்றவை:

11 comments:

  1. Thambi neenga yarayavathu love pannuringla illa summa kettanpa
    Thambi enakku ippo:
    கண்ணா நீ தூங்குடா song kekkuthupa ..............

    ReplyDelete
    Replies
    1. 🙄🙄🙄 உங்களுக்கு அந்த பாடல் கேட்டா....உங்களுக்கு காதல் ஆரம்பம்நு....அர்த்தம் தோழரே...😉😉😉

      Delete
  2. Andha alagan alagi yaru? Ithu real story mathiriye irukkey🤔........... 17 eppo varum🤗.... Me also waiting

    ReplyDelete
    Replies
    1. இந்த கதை சொல்லும் யார் அந்த அழகி அழகன் என்று.....இன்று தான் அந்த 17ஆம் தேதி..... காத்திருப்பிர்க்கு மிக்க நன்றி....சந்திப்போம் இரவு 7:30 மணிக்கு....

      Delete
  3. Enu ethanai part eruku thambi

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகையை பொறுத்தே......அதன் பகுதி இருக்கும் அண்ணா....

      Delete

Pages