காதலா! காதலா? (பகுதி 3) | Kutty Story | - Kutty Story

Comments

காதலா! காதலா? (பகுதி 3) | Kutty Story |

Share This
    வணக்கம் நண்பர்களே....இன்னிக்கு வேற அந்த நிகழ்ச்சிக்கு போகணும்னு சொன்னாங்க இன்னும் எழுந்திரிக்காம தூங்கிட்டே இருக்கான் இந்த அழகன்..என்னது ? எந்த நிகழ்ச்சிக்கா ?....என்னங்க அதுக்குள்ள மறந்துட்டா எப்புடி?....சரி சரி மறந்துடிங்கனா....பகுதி-1 ...... பகுதி-2....இதுல போய்ட்டு படிச்சுட்டு இருங்க....அதுக்குள்ள... நான் போய்ட்டு இந்த அழகன எழுப்பிட்டு வரேன்.....

அழகன் அம்மா: டேய்! அழகா!!... தம்பி!!!  எழுந்திரி 7 மணி ஆச்சு.. இன்னைக்கு அந்த நிகழ்ச்சிக்கு போகணும்னு சொன்னீங்க.....

அழகன் : அம்மா ப்ளீஸ்மா!!  கொஞ்ச நேரம் தூங்கிகுறேனே....

அழகன் அம்மா: டேய்! தம்பி... இன்னு கொஞ்ச நேரத்துல அழகியே வந்துருவா போல நீ இன்னுமே எழுந்திருக்காம இருக்க எழுந்திரி மொதல்ல.....

அழகன் : சரிமா எழுந்திரிக்குற காபி போடுங்க வரேன்...

அழகன் அம்மா: அதெல்லாம் முடியாது.. நீ எழுந்தாதா காபியே  போடுவேன் பார்த்துக்கோ...

அழகன் : அம்மா.... என்னம்மா..... சரி எழுந்துட்டேன்...

அழகன் அம்மா: போய்... பிரஷ் பண்ணிட்டு வா... காபி ரெடி....

அழகன் : சரிமா... போறேன் இருங்க....

அழகன் அம்மா: இந்தா தம்பி!!  சூடா இருக்கு பாத்து குடி....

அழகன் : அம்மா காபில  சக்கர போட்டிங்களா? இல்லயா?....இனிப்பாவே இல்ல....சரி நா போய்குளிச்சிட்டு வரேன்.  

அழகன் அம்மா: ஏதாச்சும் சொல்லாம இருக்கானா பாரு.... சரி போய் குளிச்சிட்டு வா... டவல் பாரு அந்த டேபிள் மேல இருக்கு... எடுத்துட்டுப் போ...

*(அழகி அழகனின் வீட்டுக்கு வருகை)*

அழகன் அம்மா: ஏய்! அழகிமா!!.. உள்ள வா... சூப்பர்டா டிரஸ் அழகா இருக்கு உனக்கு...

அழகி: அப்படியாமா! ரொம்ப தேங்க்ஸ்மா... அழகன் எங்க ரெடி ஆயிட்டானா?...

அழகன் அம்மா: அவனா?... இன்நேரத்துலயா?.... அவன்லாம் ரெடியாக நாலு மணி நேரம் ஆகும்... இப்போதான் குளிக்கவே போயிருக்கான்....

அழகி: ஹ...ஹா... சரிமா அவன சீக்கிரமா ரெடி பண்ணிட்டு வர சொல்லுங்க... என் பிரண்ட்ஸ்லாம் வெயிட் பண்றாங்க நான் கெளம்புறேன்...

அழகன் அம்மா: சரிடாமா...நீ போ... நா அவன அனுப்பி வைக்கிறே...

அழகி: சரிங்கம்மா போயிட்டு வரேன் டாட்டா.....

அழகன் அம்மா: டாட்டா... குட்டி.... பாத்து போங்க...

அழகன் : அம்மா அந்தப் புது டிரஸ் எங்கு வச்சீங்க? காணவே காணம்...

அழகன் அம்மா: உள்ள ஷர்ட் ஸ்டான்டுல பாருடா இருக்கும்.... டேய்!!! தம்பி!!!அழகிலாம்.... வந்துட்டு கிளம்பியே போயிட்டா..... நீ எப்போ கெளம்ப போற...

அழகன் : என்னது!!! அழகி அதுக்குள்ள இங்க வந்தாளா எங்க அவள காணல....

அழகன் அம்மா: நீ கெளம்ப நாலு மணி நேரம் ஆகும்... அது வரைக்கும் அவ வெயிட் பண்ணுவாளா... அவ அப்போவே கிளம்பிப் போய்ட்டா....

அழகன் : சரி சரி நானும் கிளம்பறேன் மா....

அழகன் அம்மா: சரிடா தம்பி... பாத்து போயிட்டு வா.....

*(அழகியும் அவள் தோழிகளும் நிகழ்ச்சி நடக்கும் அரங்கம் வந்தனர்)*

அழகி: ஹே!! அமைதியாக இருங்க எல்லாரும் ... அமா... நம்ம வகுப்பு பசங்கலாம் எங்க?..இன்னு வரல போலயே ???

தோழிகள் :  ஆமா டீ... வழக்கம்போல இன்னிக்கும்  டிமிக்கி கொடுத்துடானுங்களா?

அழகன் : டேய் வாங்கடா சீக்கிரம் .. நிகழ்ச்சி ஆரம்பமாகிருக்கும் .. நமக்கு இன்னிக்கு கடைசி லைன் தான் போல (அழகனும் அவனது நண்பர்களும் ஒரு லைனில் அமர்ந்தனர்.)

 *( நிகழ்ச்சி மிக சுவாரஸ்யமாக நடந்து முடிந்தது)*

அழகி: சரி வாங்க எல்லாரும் வீட்டுக்கு போலா .. சாய்ங்காலமாயிருச்சு

*( அழகன் அருகில் இருந்த தன்னார்வலர்  கைப்பேசி ஒலித்தது)*

அழகன் : டேய் இந்த பாட்டு நல்லா இருக்குல எனக்கு ரொம்ப பிடிக்கும்...
( என்று கூறிக்கொண்டே நிமிர்ந்து பார்த்தான் அழகி வந்தாள்.... அந்தி மாலை நேரம்... ஆற்றங்கரை ஓரம்.... நிலா வந்ததே.... என் நிலா வந்ததே"  ஏன்னும் இசை ஒலிர....கண் சிமிட்டும் நேரத்தில் கருமேகம் நிலாவை  மறைத்தது போல...கண்ணெதிரே கண்டவள் காணாமல் மறைந்தால்)

தோழிகள் : அங்க பாரு அழகன் புது டிரஸ் போட்டுருக்கான்.... நல்லா இருக்கு அவனுக்கு.....

அழகி: எங்கடி இருக்கான் ????!!!!!!

 (அழகியின் காதில் மெல்லிய ஒரு இசை மழை  "லேசா லேசா.... நீ இல்லாமல் வாழ்வது லேசா"  அவள் காதில் கேட்க வெகு தூரத்தில் அழகனின் முகம் லேசாக ஒளிர்ந்தது).

அழகன் : எங்கடா அழகி?...இப்போதான்  பாத்தேன் அதுக்குள்ள ...காணம்?

தோழர்கள் : அவங்க எப்பயோ போய்ருப்பாங்கடா வா நாம போலாம் !!!!!

*(இரவு அழகியின் வீட்டில் )*

அழகியின் அப்பா : எப்படிகண்ணு  இருந்துச்சு நிகழ்ச்சி?

அழகி: ரொம்ப யூஸ்புல்லா இருந்துச்சுப்பா...ரொம்ப அனுபவமா இருக்கவங்க வந்து அட்வைஸ் பண்ணாங்க......அப்பா!! இந்த ராஜா ராணி  நாடகம் பார்போம்ல அந்த ஹுரோ அன்னிக்கு ஒரு  டிரஸ் போற்றுந்தாருல அது மாறி அழகன் இன்னிக்குபோட்ருந்தான்  .. அவனுக்கு அது நல்லாவே இல்லப்பா...

*( இரவு அழகன் வீட்டில் )*

அழகன் : அம்மா... தோச கொண்டு வா சீக்கிரம்... பசிக்குது... என்னமா இந்த டீவில எதுமே நல்லவே இல்ல???

அழகன் அம்மா: ஒரு சேனல் வச்சா தான... இப்படி மாத்திகிட்டே இருந்தா எப்புடி...குடு இங்க.....

அழகன் : அம்மா இந்த கொம்பன் படத்துல ஒரு பாட்டு இருக்கும்ல... அந்த கருப்பு நெரத்தழகி பாட்டு... அதுல  லசக்ஸ்மிமேனன் போட்டுருக்கும்ல ஒரு தாவணி பாவாட அது மாதிரி தான் அழகி இன்னிக்கு கட்டி வந்துருந்தா....நல்லாவே இல்ல அவளுக்கு......... 

அழகன் அம்மா: ............. அம்மா என்ன சொன்னாங்கன்னு தெரியலையா... அவுங்களுக்கு கொஞ்சம் வேல இருக்காமா அடுத்த பகுதியலதான் சொல்லுவாங்கலாம்...........தொடரும்...


6 comments:

  1. Aada ippaty intresting ah pooietu irukkum pothu thotarumnu pottingley😩

    ReplyDelete
    Replies
    1. ஹ....ஹா......நாளை மீண்டும் சந்திப்போம்

      Delete
  2. Replies
    1. நன்றி தோழரே...இருப்பினும் அழகன் கதையின் நாயகனே!!

      Delete
  3. Replies
    1. 🙏 நன்றிகள் பல அண்ணா🙏

      Delete

Pages