வணக்கம் நட்புக்களே.... இந்த அழகன் வேற ரொம்ப சோகமா இருந்தான் என்னனு கேக்கலாம்னு இருந்தேன்.... அதுக்குள்ள முகம் கழுவிட்டு வரேனு போனவன இன்னும் காணம்.... அவன் எப்ப சோகமா இருந்தானு என்று கேட்கிறீர்களா?.... போங்க! போங்க! எல்லாம் வழக்கமா நடக்குறதுதான.... "நானே ஒரு மறதி ஆனா நீங்க என்ன விட பயங்கர மறதியா இருப்பீங்க போல" சரி சரி...பகுதி-1....பகுதி-2....பகுதி-3....பகுதி-4....பகுதி-5....இதுல போய்ட்டு பாத்துட்டு இருங்க நான் போய் அழகன பார்க்குற என்ன பண்ணுறானு....
அழகன் அம்மா: தம்பி! அழகா!! என்னடா ஆச்சு?.. ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்க?...
அழகன்: அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா?... லைட்டா வயிறு வலிக்கிற மாதிரி இருக்கு....
அழகன் அம்மா: என்னாச்சு தம்பி?.... அதான் கல்யாணத்திலும் நல்லா சாப்பிடலையா?... சரி படுத்துக்கோ நான் மாத்தர எடுத்துட்டு வரேன்...
அழகன்: அதெல்லாம் எதுவும் வேணாம்மா இப்ப பரவால்ல....
அழகன் அம்மா: சரி தம்பி படுத்துக்கோ கொஞ்ச நேரம்.... சரியா போயிரும்...
அழகன்: சரி மா.... படுத்துக்குறேன்....
*(நேரம் இரவு 8 மணி)*
அழகன் அம்மா: அழகா!!! தம்பி!!! எழுந்திருச்சு கொஞ்சமா சாப்பிடு தங்கம்....
அழகன்: அம்மா!! தோ.. வரேன்...
அழகன் அம்மா: டேய் அழகா!!!!!... நீ ஏன் இப்படி இருக்குன்னு தெரிஞ்சு போச்சு நாளை மறுநாள் ரிசல்ட் அதனாலதான.... எப்படி கண்டுபிடிச்ச பார்த்தியா அம்மா!!!!
அழகன்: அம்மா நீங்க வேற பயமுறுத்தாதிங்க....
அழகன் அம்மா: தம்பி! எனக்கு ஒரே ஒரு ஆசதான் நீ படிச்சு பெரிய சிவில் இன்ஜினியர் ஆகணும்... அது போதும் எனக்கு மார்க்கெல்லாம் அதிகமா தேவ இல்லடா...
அழகன்: (பக்கென்ற ஒரு வலி அழகனின் மனதை கிள்ளியது.... அவன் படிக்க நினைத்ததோ விஸ்காம்.... ஆனா அம்மா சொல்லுறது இன்ஜினியரிங்... ) வலியை மனதில் மறைத்துக் கொண்டு அம்மா முதல்ல ரிசல்ட் வரட்டும் பேசிக்கலாம் விடுங்க!!!
அழகன் அம்மா: சரி தம்பி நாளைக்கு ஸ்கூலுக்கு போகனும்னு சொன்ன.... நானும் வரேன் போலாம்.... இப்ப போய் தூங்கு தம்பி....
அழகன்: சரிங்க மா குட் நைட்....
அழகன் அம்மா: குட் நைட் கண்ணு...
*(இரவு அழகியின் வீட்டில்)*
அழகி அப்பா: பாப்பா இன்னும் ரெண்டு நாள்ல ரிசல்ட்.... என்ன பண்ணலாம்னு இருக்க?....
அழகி: அப்பா!... ஃபுல் பிளாங்க் என்ன படிக்கிறதுனே தெரியலப்பா!....
அழகி அப்பா: பாப்பா நீ எஞ்சினியரிங்கில சிவில் எடுத்து படிடா... பின்னாடி ஏதாச்சும் கவர்ன்மெண்ட் எக்ஸாம்கெல்லாம் ஈசியா இருக்கும்...
அழகி: சரிங்கப்பா ரிசல்ட் வரட்டும் அப்புறமா எல்லாம் பேசிக்கலாம்...நாளைக்கு ஸ்கூலுக்கு போகணும் என்று சொன்னேன்ல வரீங்க தான....
அழகி அப்பா: பாப்பா அப்பாவுக்கு கொஞ்சம் வேலை இருக்கு டா.... நீ போய்ட்டு வரியா?..
அழகி: சரிங்கப்பா நீங்க வொர்க் பாருங்கப்பா....இப்போ நான் போய் தூங்குறேன்...
அழகி அப்பா: சரி பாப்பா தூங்கு போ...
*(நேரம் காலை 9:30 மணி... அழகனும், அம்மாவும், அழகியும் பள்ளிக்கு வந்து சேர்ந்தனர்)*
அழகன் அம்மா: ஹேய் அழகிமா!!... கல்யாணத்துக்கு வரல போல?.....
அழகி: ஹாய் மா!... அப்பாவுக்கு வேலை இருந்துச்சு அதான் வர முடியல மா.... அழகன் எங்கமா?
அழகன் அம்மா: இங்கதான் சுத்திகிட்டு இருந்தான்.... தேடி பாருமா... என்னன்னு தெரியல நேத்துல இருந்து டல்லாவே இருக்கான்...
அழகி: என்னாச்சுமா?... சரி நான் என்னனு கேக்குறேன்.....
அழகன் அம்மா: நாளைக்கு ரிசல்ட்வேற... என்ன படிக்கலாம்னு இருக்கமா?
அழகி: அப்பா சிவில் எடுத்து படிக்க சொல்றாருமா....
அழகன் அம்மா : சூப்பர் குட்டி!! அதத்தான் நானும் அழகான படிக்க சொல்லிருக்கேன்... என்ன பண்ணுறான்னு தெரியல...
அழகியின் மனசு: (ஐ ஜாலி... என்கூட படிக்க ஒருத்தன் ரெடி... இன்னும்.... கொஞ்சம் பேர தெரட்டினா போதும்...)
அழகி: ரொம்ப சந்தோசம்மா!! நான் போய் அவனை தேடி பாக்குறேன்....
அழகன் அம்மா: சரி குட்டி... போ...
அழகி: (நீண்ட தேடுதலுக்கு பின்னால் அழகனை கண்ட அழகி அவன் பின்னால் வந்து கையைக் கில்லி) "டேய் அழகா.... சேம் பின்ச்"....
அழகன்: சட்டுன்னு திரும்பி.... உனக்கு அறிவே இல்லையா?.... எதுக்குக் கில்லுன? எதுக்கு சேம் பின்ச்?
அழகி: அழகா! என்ன ஆச்சு? ஏன் இவ்ளோ கோவப்படுறடா.... நீயும், நானும் சிவில் தான எடுக்க போறோம் அதான் அப்படி பண்ணினேன்... சாரிடா....
அழகன்: எனக்கு அதுல விருப்பம் இல்ல... விஸ்காம் தான் எடுக்கணும்னு ஆச ஆனா அம்மா சிவில் எடுக்க சொல்றாங்க...
அழகி: சரி விடு நான் பேசுறேன்.... ரிசல்ட் வரட்டும் பேசிக்கலாம்டா.... நான் கிளம்புறேன் பாய்.....
அழகன்: ம்ம்...சரி பாய்....................
(வீட்டுக்குச் சென்ற அழகியின் மனசுல...நாளைக்கு வேற ரிசல்ட்... மார்க் வந்தா காலேஜ்ல அட்மிஷன் போடணும்... அப்பா சொன்னத எடுத்து படிச்சா அழகன் கூட படிக்க முடியாது.... அழகன் கூட படிக்கலாம்னு நினைச்சா.... அப்பாவோட ஆசைய நிறைவேத்த முடியாது....)
"அழகான அழகியை மதில்மேல் நின்ற பூனையை போல்.... முழிக்க விட்டு..... அதிலிருந்து தாவவும் முடியாமல்.... தூங்கவும் முடியாமல்... வருத்தத்தில் உருகும் வெறுப்பான மயக்கத்தில் ஒரு உறக்கம்"
மொதல்ல ரிசல்ட் வரட்டும்... அதுல பாஸ் ஆகுறாங்களானே தெரில.... அதுக்குள்ள சிவில் ஒரு பக்கம்... விஸ்காம் ஒரு பக்கம்..... அடுத்த பகுதில தெரிஞ்சு போயிடும் யார் எப்படின்னு.... அப்புறம் பேசிக்கலாம் அவங்கள.....
தேர்வு முடிவுகலுடன்.... சந்திப்போம் மீண்டும் அடுத்த பகுதியில்.
எங்களது மற்ற படைப்புகள்:
மற்றவை:
Nice
ReplyDelete