எல்லாருக்கும் நமஸ்காரம்... இன்னிக்கு தேதி 19..... என்ன நாள் தெரியுமா?... ரிசல்ட்ங்க இன்னிக்கி... 8 மணி ஆச்சு இந்த அழகன் இன்னு எழுந்திருக்காம தூங்கிட்டே இருக்கான்..... என்னது!! என்ன ரிசல்ட்டா? அதான பாத்த... எங்கடா இன்னும் கேக்காம இருக்கீங்கலெனு சரி! சரி! டென்ஷன் ஆவாதீங்க..பகுதி-1....பகுதி-2....பகுதி-3....பகுதி-4....பகுதி-5....பகுதி-6.... இதுல போய்ட்டு அது என்ன ரிசல்ட்னு பாத்துட்டு இருங்க நான் போய் அழகன எழுப்பிவிட்டு வரேன்....
அழகன் அம்மா: தம்பி!! எழுந்திரி!!...(உண்மையான டைம் 8 மணி ஆனா அம்மா சொல்றது) 9:30 மணி ஆகுது இன்னு கொஞ்சநேரத்தில ரிசல்ட்... எழுந்திருடா கண்ணா....(இது அழகனுக்கு மட்டுமில்லிங்க... எல்லா வீட்டிலும் இப்படித்தான் நடக்குது)...
அழகன்: எழுந்திரிக்கிறேன்மா... போங்க...........
அழகன் அம்மா: நான் சொன்னா... நீ கேக்கமாட்ட எழுந்து ஸ்கூலுக்கு போகணும் லேட் ஆகிட்டா... என்ன கேக்காத...
(சில நிமிடங்களுக்குப் பிறகு... அழகன் எழுந்து ரெடியாகி கடிகாரத்தப் பாத்தா... அப்போதான் 9 மணி)
அழகன்: அம்மா!!!.... என்ன இது? இப்பதான் 9 மணி.... உங்கள பேசிக்கிறேன் இருங்க....
அழகன் அம்மா: (ஒரு குட்டி சிரிப்புடன்).... சரி பரவால்ல போயிட்டு வா தம்பி..... அம்மா உன்னோட ரிட்டன்காக வெயிட்டிங்....
அழகன்: (ஒரு செல்ல கோவத்துடன்) சரி போயிட்டு வரேன் போங்க....
அழகன் அம்மா: சரி தம்பி! ரிசல்ட் பாத்ததும் ஓடி வந்துரு... சரியா?
அழகன்: சரி மா....
(நேரம் காலை 9:58 மணி மாணவர்கள் அனைவரும் பள்ளியில் தேர்வு முடிவுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க..... அப்போ ஒரு சத்தம் என்னடான்னு பார்த்தா.... லப்டப் லப்டப்னு துடிக்கிற இதயமெல்லாம் பக்பக் பக்பக்னு துடிச்சிகிட்டிருக்கு...)
*(தேர்வு முடிவுகள் தகவல் பலகையில் வெளியிடப்பட்டது)*
*( ஆரவாரமான குரலில் நண்பர்கள்)*
அழகி : ஹேய்!! அமைதியா இருங்கடி ..நகருங்க... நா என்னேட மார்க் பாக்கனும்...
(அழகி அவ அப்பா ஆசப்பட்ட மார்க் எடுத்துட்டா...)
அழகன் : ஏய்..அழகி!!! என்னேட மார்க்க பாத்தியா ?
அழகி : இல்லடா இன்னும் பாக்கள..... நா நல்ல மார்க் வாங்கிடேன் டா!!!!! (மகிழ்ச்சியுடன்)
அழகன் : நானும்... எப்படியும் உன்னவிட அதிக மார்க் தான் எடுத்திருப்பேன்...
அழகி : சரி டா!!! .. பாத்துட்டு வா .. அப்புறமா நா வீட்டுக்கு வரேன்..
அழகன்: சரி சரி....கெளம்பு....
( அழகன் நினைத்த மார்க் வரல .. அவன் சோகத்தில மூழ்கிட்டான்)
அழகன் அம்மா : பரவால விடுப்பா .. கவலப் படாத...
அழகன் : என்ன மன்னிச்சிருங்கமா!!! .....
அழகன் அம்மா : அட!! வா தம்பி ...நமக்கு கடவுள் இருக்காரு கை விட மாட்டாரு...
*(அழகி அழகனோட வீட்டுக்கு வந்துட்டா)*
அழகி : ஹாய் அம்மா!!... அழகன் எங்க?
(அழகன் ...அழகியை விட குறைவாக மார்க் எடுத்ததால் அவளை பார்த்ததும் வருத்தத்தில் வீட்டிற்குள் ஓடினான்)
அழகி : அம்மா!! ஏன்? அழகன் என்ன பாத்துட்டு உள்ள ஓடுறான்!!!!!
அழகன் அம்மா : அதுவா அழகி ....
(அழகன் சோகத்தின் காரணத்தை சொல்லி சில நேரம் அழகனின் அம்மா மற்றும் அழகியும் பேசிக்கொண்டு இருந்தார்கள்)
அழகி: சரிங்கமா......விடுங்க.....அவன திட்டாதிங்க....
அழகன் அம்மா: இல்லமா நா திட்டல.....
அழகி: (ஒரு குட்டி வருத்தத்துடன் )....சரிங்கம்மா...நான் போய்ட்டு நாளைக்கு வரேன்...
அழகன் அம்மா: சரிடா தங்கம்....போய்ட்டு நாளைக்கு வா...மறக்காம....
அழகி: சரிங்கம்மா.........
*(அன்று இரவு அழகன் வீட்டில்)*
அழகன் அம்மா : தம்பி... நான் ஆசப்பட்ட காலேஜில விஸ்காம் படிப்பு நல்லா இருக்காமா... அது எடுத்து படிக்கிறியா...
அழகன் : அம்மா!!!!!!!! நான் மனசுல நினச்சத அப்படியே சொல்லிடிங்கம்மா .... Love u மா.... இதுல படிச்சு நான் நல்ல நிலைமைக்கு கண்டிப்பாக வருவேன்மா...
( அடுத்த நாள் காலை அழகி , அழகன் அம்மாவை பார்க்க வருகின்றாள் )
அழகி : அம்மா .....
அழகன் : Excuse me அழகி!!! .... அம்மா வீட்டில இல்ல..... அப்புறம்... நீ என்ன விட அதிகமா மார்க் எடுத்துடனு ...ஓவரா சீன் போடாத... மார்க் குறைவானாலும் நா எனக்கு புடிச்ச படிப்பு தான் எடுத்து படிக்க போறேன்...
அழகி : அப்படியா!! வாழ்த்துக்கள்டா அழகா...........
அழகன் : உன்னேட வாழ்த்து எனக்கு ஒன்னும் தேவையில்ல போ....போ....கெளம்பு....
( அழகி அழுதுகொண்டே அங்கிருந்து கிளம்பி சென்றதை அழகன் அம்மா பார்த்தார்)
அழகன் அம்மா : ஏன்டா?...தம்பி!! அழகி அழுதுட்டே... போறா!!
அழகன் : நா எனக்கு புடிச்சத எடுத்து படிக்க போறேனு பொறாமமா அவளுக்கு நான் சொன்னேன்னு அப்டி போறா.....
அழகன் அம்மா : யார பாத்து என்ன வார்தடா சொன்ன!!! (அம்மா....தன்னையறியாமலே கோவத்துடன் அழகன் கண்ணத்தில் அறைந்தார் )....
அவ்ளோ செல்ல பையன... ஏன்?... எதுக்கு?... அம்மா கன்னத்துல அறைஞ்சாங்கனு எனக்கும் தெரியலயே.....என்னக்கே பாவமா போச்சு....
அம்மா அறைதலின் மர்மம் என்னவோ?.....அதனை....நாளை எந்தன் கதை வரிகள் சொல்லுமோ!..... நீண்ட எதிர்பார்ப்புகளுடன் மீண்டும் அடுத்த பகுதியில்...
எங்களது மற்ற படைப்புகள்:
மற்றவை:
Super thambi
ReplyDeleteTq annaa
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteY alagan alageya thittena.........Atharkana karanam ennavaaa irukkum?🤔
DeleteOruvela appatha alage avalukku pudicha padipa eduthu padipanu alagan thitterupanooooooo...... K tmw papom
நாளைக்கு பாக்கலாம்...
Delete