வணக்கமுங்கோ..... எல்லாரும் எப்படி இருக்கீங்க.... வேளாவேளைக்கு நல்லா சாப்பிடுறீங்களா?... அதெல்லாம் கரெக்டா உள்ள போயிரும் அப்படித்தானே!!!... சரிங்க நல்லா சாப்பிடுங்க.... வெளில போய் சுத்தாதீங்க வெயில் ரொம்ப ஜாஸ்தி... அதவிட கொரோனா பயம் ரொம்ப அதிகமாவே இருக்கு...So Stay Safeee.... சரிங்க நேத்து சண்டலாம் ஒரு வழியா முடிஞ்சிடுச்சு... யாருக்கு சண்டைன்னு கேப்பிங்களே?... தெரியும் அதான் நானே கேட்டுட்டேன்.... வழக்கம்போல காதலா! காதலா? இதுல போய்ட்டு படிச்சிட்டு வாங்க அப்புறமா நாம பேசலாம்.....
(சிரித்துக்கொண்டு செல்லச் சண்டை போட்டு விளையாடிக் கொண்டிருந்த அழகியின் முகத்தில் திடீரென ஏதோ ஒன்றை இழந்தது போல ஒரு ஏக்கம்)
அழகன் : எய் அழகி என்ன ஆச்சு?... ஏன் அமைதியா இருக்க?....
அழகி : எதுமில்லடா ...நா.. கிளம்புறேன்.........
அழகன் : ஏய்... சீன் போடாத ... சோகமா இருக்க மாறி ...
அழகி : ..............
அழகன் : ஏய் .. நிஜமாவே நீ சோகமாதா இருக்கியா....என்ன ஆச்சு நான் தா..உன்ன என்னோட படத்துல ஹீரோயினா போடுறேனு சொல்லிட்டனே....அப்பறம் என்ன???
அழகி : அதுக்கு.....இல்லடா...... எல்லாரும் தனித்தனியா ஒவ்வொரு காலேஜ்ல சேந்துருவிங்க...நான் எப்படி....புது இடத்துக்கு போய்... தனியா படிக்குறதுன்னு தெரியலடா....
அழகன் : இது தான் உன் பிரச்சனயா... வா....நீயும் என் கூட வந்து விஸ்காம் எடுத்து படி....
அழகி : இல்லடா....எங்க அப்பா என்ன சிவில் இஞ்சினியரிங் படிக்க வைக்க ஆச பட்டாரு.....நானும்.... எப்படியும் நீ அதுதான் படிப்பனு நினைச்சு....அவரு சொல்லும்போது சரின்னு சொல்லிட்டேன்....ஆனா நீ இப்போ வேற எடுத்து படிக்க போற....அதான் எனக்கு ஒரு மாதிரியா இருக்கு...
அழகன் : இவ்வளவு தான.. எங்க காலேஜ்ல எல்லா படிப்புமே இருக்கு ...நீ என் காலேஜிலையே வந்து சிவில் இன்ஜினியரிங் எடுத்து படி....எல்லாமே ஓவர்...
அழகி : ஐஐஐ ..நல்ல ஐடியா தான்...உங்க காலேஜ்ல எல்லாமே இருக்கா?...அவ்ளோ பெரிய காலேஜா அது...அனா எங்க அப்பா என்ன தனியா சேக்க மாட்டாறே.....
அழகன் : ஏன் ?
அழகி : என்க்கு ஒன்னுமே தெரியாதில்ல அதான்...
அழகன் : அடிப்பாவி ...யாருக்கு உனக்கா ஒன்னும் தெரியாது??....விட்டா ஊரையே விலைக்கு வாங்குவ ... உனக்கு ஒன்னும் தெரியாதா..??..
நீ எதாவது திருட்டுத்தனம் பன்னிருவனு தான் அவரு அப்படி சொல்லிருப்பாரு
அழகி : டேய் ஓவரா கின்டல் பண்ணாதடா....நான் கிளம்புறேன்...பாய்..
அழகன் : போய் ஒழுங்கா படிக்கிற வழிய பாரு போ....
அழகி : எனக்கு தெரியும் நீ அடங்கு.... மொதல்ல நீ கிளம்பு......போ........போ.....
*( இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்)*
(அழகி அங்கிருந்து புறப்பட்டு செல்லும் பொது... வழியில் அவளது தோழிகளைக் கண்டாள்)
அழகி: ஹேய்....எல்லாரும் இங்க என்ன பண்ணுரிங்க.....
தோழிகள் : ஹேய் அழகி!!... நாங்க எல்லாரும் ஒரு முடிவு எடுத்துருக்கோம்....
அழகி: அப்படியா!! என்ன முடிவு எடுத்துருக்கிங்க...??
தோழிகள்: நாங்க எல்லாரும் ஒரே..காலேஜில படிக்கலான்னு முடிவு பண்ணிருக்கோம்.....
அழகி: அப்படியா!!...சூப்பர் என்ன காலேஜ் அது!....
தோழிகள்: சென்னைல இருக்கு அந்த காலேஜ்...அழகன் கூட அங்கதான் படிக்க போறானு நெனைக்குறேன்....
அழகி : ஹேய்...அந்த காலேஜா....எப்படி டீ?... அது அவ்ளோ தூரத்துல இருக்கே !!...
தோழிகள் :அதெல்லாம் தெரியல டீ.... எப்படின்னு... ஆனா அங்கதான் படிக்க போறோம்....சரி...நாங்க கெளம்புறோம் டைம் ஆச்சு....பாய்...
அழகி: என்னங்கடி.....என்ன இப்படி பொலம்ப விட்டு எல்லாரும் போறீங்க....
*(கொழப்பதுடன் அழகி வீட்டிற்கு சென்றால்)*
அழகி அப்பா : அழகி!... நீ உன்னோட காலேஜ சென்னைல தான் படிக்க போற... அழகன் கூட அந்த காலேஜ்ல தான் படிக்க போறான் போல....அங்கேயே போய் படி நல்ல காலேஜாம் அது......
அழகி: அப்பா!!!!!!!!!!!!
அழகி அப்பா: அழகி...வேற எதுவும் பேசாத ..நான் சொன்ன சொன்னது தான்...
அழகியின் மனசு: அது என்ன அவ்ளோ பெரிய காலேஜா!!!...ரொம்ப சீனா இருக்கே....அழகி கொட்ட முடியாத சந்தோசத்துடன்...இது கண்டிப்பா அழகனோட வேலயாதான் இருக்கும்....... நாளைக்கு அவன் வரடும் பேசிக்கிற .....
என்ன நண்பர்களே....எப்படி இதெல்லாம் நடந்திருக்கும்....இதுக்கெல்லாம் காரணம் அழகன்தானு....அழகி நெனைக்குரா....ஆனா அதுக்கு பின்னாடி என்னவா இருக்கும்....நீங்க என்ன நினைக்குரிங்கனு மறக்காம கமெண்ட் பண்ணுங்க....அப்புறம் எங்களோட கத உங்களுக்கு புடிச்சிருந்தா மறக்காம எங்களோட Kutty story ya.... FOLLOW பண்ணுங்க.... அப்போதான் யார் யாருலாம் எங்களோட கதைய படிக்குரிங்கனு எங்களுக்கு தெரியும்.....கதை எழுதுறதுக்கும் விருப்பமாவும் இருக்கும்..... சரிங்க நண்பர்களே....இன்னிக்கு இது போதும்...... மீண்டும் சில காதல் வரிகளுடன்.... சந்திப்போம்.... அடுத்த பகுதியில் அதுவரை உங்களின் அன்பு எனும் காதலை விட்டுப் பிரிந்து... துடிக்காத இதையத்துடிப்பை எண்ணிக்கொண்டிருக்கும் அன்பு இதயங்கள்.... உங்கள் DonTechoMix
எங்களது மற்ற படைப்புகள்:
மற்றவை:
Wow super.......
ReplyDeleteTqqqq
Delete