வழக்கமா எல்லாருக்கும் அவங்க அம்மாவ ரொம்ப புடிக்கும் ஆனா.... எனக்கு கொஞ்சம் அதிகமாகவே புடிக்குங்க...ஏன்னு கேட்டீங்கனா? எங்க அம்மா இந்த கலியுகத்தில என்ன தனியா வளர்த்தாங்க!... மன்னிச்சிடுங்க! என் அப்பாவும் சேர்த்துதான் என்னை வளர்த்தாரு... ஆனா என்ன.. கொஞ்சம் தூரமா தேவர் உலகத்தில இருந்து என்ன பார்த்துக்கிட்டாருங்க... அவர் எங்களை விட்டு போய் பத்து வருஷமாகுது....
எனக்கு படிக்கிறது எல்லாமே ரொம்ப புடிக்கும் பத்தாம் வகுப்புல 453 மார்க் எடுத்தேன்... இப்போ 12-வது பரிட்சை நல்லா தான் எழுதி இருக்கேன். மார்க் எப்படி வரும்னு தெரியல.... அதுக்குள்ள இந்த கொரோனா நோய் வந்து எல்லாத்தையும் நிறுத்தி போடுச்சு.
எனக்கு நண்பர்கள் வட்டம் கொஞ்சம் பெருசுங்க...அதுல பெண் தோழிகள்ள பாத்தீங்கன்னா அழகி அப்படிங்கிற பொண்ண எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும்...என்னதான் எனக்கு புடிச்சி இருந்தாலும்... என்னய அதிகமா கோவப்படுத்துறதும் அவதான்.
வாங்க நண்பர்களே கொஞ்சம் அவளப்பத்தியும் தெரிஞ்சிக்கலாம்...
அழகி வந்துட்டியா! வா இங்க... இவங்க தான் நம்ம கூட பயணிக்க போற நண்பர்கள்.... கொஞ்சம் உன்ன அறிமுகம் பண்ணிக்கோ...
அழகி : நீ சொன்னா நான் பண்ணனுமா போடா!....நான் நாளைக்கு தான் சொல்லுவேன்....
அழகன் : அதான பார்த்தேன்!... நீயாவது நான் சொல்ரத செய்யறதாவுது....
சரி விடுங்க நண்பர்களே இவ ரொம்ப சீன் போடுறா..... நாம அடுத்த பகுதியில அவள பேசிக்கலாம்...........தொடரும்....
எங்களது மற்ற படைப்புகள்:
மற்றவை:
Super thambi
ReplyDeleteநன்றி....எங்களோடு இணைந்திருங்கள் ...இந்த தொடர் தினமும் தொடரும்...
DeleteWaiting
ReplyDeleteஉங்களது காத்திருப்பு வீன் போகாது தோழி.....
Delete