காதலா! காதலா? (பகுதி 2) | Kutty Story | - Kutty Story

Comments

காதலா! காதலா? (பகுதி 2) | Kutty Story |

Share This
    வணக்கம்  நண்பர்களே எப்புடி இருக்கீங்க....என்ன நியாபகம் இருக்கா நான்தான் அழகன். இந்த அழகி உங்கள்ட்ட அறிமுகம் பண்ணிகிட்டாலா இல்லையா ?. என்னது ! அழகி யாரா?...என்னப்பா நேத்து தான சொன்னேன் அதுக்குள்ள மறந்தாச்சா? சரி  அப்படி நியாபகம் இல்லனா  காதலா! காதலா? (பகுதி 1)  இதுல போய்ட்டு படிச்சு வாங்க. நான் போய் கொஞ்ச நேரம் அழகி கிட்ட பேசிட்டு இருக்கேன்.


அழகன்: ஹாய் அழகி...! நீ வரதுக்கு இவ்ளோ நேரமா?.... நான் எவ்ளோ நேரமா வெயிட் பண்ணேன் தெரியுமா...?

அழகி: டேய்! டேய்! உன்ன பத்தி எனக்கு தெரியாதா?  எப்ப வந்திருப்பேனு எனக்கு தெரியும் நீ நிறுத்து...!

அழகன்: கண்டு பிடிச்சிட்டா போலையே... சரி! சரி!... விடு! விடு!.

அழகி: உன்னலாம் வச்சுகிட்டு என்ன பண்ணறதோ தெரியலடா சாமி...

அழகன்: சரி சரி போதும்... நேத்து ஏதோ சீன் போட்ட ஓவரா... நம்ம நண்பர்கள் கிட்ட அறிமுகம் பண்ணிக்கோனு சொன்னதுக்கு  இன்னிக்கு தான் அறிமுகம் பண்ணுவேன்னு சொன்ன .... நம்மளே பேசிக்கிட்டு இருந்தா அப்புறம் நம்ம நண்பர்கள் டென்ஷன் ஆயிருவாங்க... கொஞ்சம் சொல்லிரு டீ..... உன்ன பத்தியும்....

அழகி: எனக்கு சொல்லத் தெரியும் நீங்க நிறுத்துங்க சார்...

    நண்பர்களே... எல்லாருக்கும் வணக்கம்... இவன் இப்புடித்தான்   ஏதாச்சும் ஒலறிட்டு இருப்பான் அதெல்லாம் கண்டுக்காதீங்க.....
     என் பெயர் தாங்க...... அழகி! என்னய எங்க அப்பா தான்  வளர்தாரு , அம்மா இல்லை. எங்க உறவினர்களையும் எனக்கு ரொம்ப  பிடிக்கும். எனக்கு நல்லா படிச்சு, எங்க அப்பாவ உட்காரவச்சு  சோறு  போடனும்னு ஆசை... ஆசை பட்டா போதுமா வேல வாங்கணுமே! அதுக்கு நல்ல  மதிப்பெண் வேணுமே..! பார்ப்போம் என் தேர்வு முடிவு எப்படி இருக்குனு..... இதுதான் இந்த அழகியின் அறிமுகம்...
 இருங்க!.. இருங்க...! இந்த அழகன் பத்தி சொல்ல மறந்துடனே..... என்ன சொல்றது? "ஊர் உலகத்துல பத்து பதினஞ்சு ப்ரெண்ட்ஸ் வச்சிருக்கவநெல்லாம் சந்தோசமா இருக்கான் நான் ஒரே ஒரு பிரண்டு வச்சிக்கிட்டு நான் நான் படுற பாடு இருக்கே!!!!. ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லைங்க... எவ்வளதுதான் பாடு படுத்தினாலும் எனக்கு ஒரு நல்ல பிரண்டு அவன்தான்... அப்புறம் அழகனோட அம்மாவ எனக்கு ரொம்ப பிடிக்கும்.. இவ்வளவு தான் எங்க ரெண்டு பேரு பத்தியும்  இதுக்கு மேல தெரியனுமா வாங்க எங்க கூடவே....

***சில தினங்களுக்கு பிறகு***

அழகியின்  அப்பா : அழகி குட் மார்னிங்... முகம் கழுவி விட்டு வா... டீ போட்டு வச்சுருக்கேன்..

அழகி: சரி அப்பா..

அழகியின்  அப்பா : வா அழகி டீ குடிச்சுட்டு ...இந்த விளம்பரத்தை பாரு..12ஆம் வகுப்பு முடிச்ச மாணவர்களுக்கு எதே அறிவுரை வழங்குக்றாங்கலாம்...

அழகி: நானே உங்க கிட்ட செல்லனும்னு இருந்தேன்ப்பா... அது ரொம்ப உதவியா இருக்குமாம் நான் என் நண்பர்களுடன் போய்ட்டு வரென்ப்பா...

அழகியின்  அப்பா : சரி அழகி உன் நண்பர்களுடன் பேசு இத பத்தி... நான் வேலைக்கு கிளம்புறேன்...

அழகி: சரி அப்பா... நானும் என்  நண்பர்கள் கிட்ட சொல்லுறேன் இத பத்தி....

*(அருகில் இருக்கும் நண்பர்கலுடன் இந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு செல்கிறாள் அழகி)*

அழகன் அம்மா : ஹேய் அழகி ...உள்ள வா!! எப்படி இருக்க? தேர்வு நல்லா எழுதினியா... அழகன் எப்படி எழுதிருக்கானு கொஞ்சம் கேட்டு சொல்லுமா . நான் கேட்டா சொல்லமாட்டிங்குறான்....

அழகி: நாங்க எல்லாரும் நல்லா எழுதியிருக்கோம் அம்மா... சரி அம்மா.. அழகன் இல்லையா அம்மா ?

அழகன் அம்மா : இப்போதான்... கடைக்கு போனான் அவன்... 

அழகி: சரி அம்மா...நாளைக்கு இந்த நிகழ்ச்சிக்கு அவன வர சொல்லுங்க ..மேல் படிப்புக்கு உதவும்.. அம்மா அப்புறம் நானும் என் தோழிகளும் நாளைக்கு பாவாடை- தாவணி கட்டப்பொறோம் காலைல கட்டிட்டு வந்து காட்டுறேன்...

அழகன் அம்மா : பாருடா! சரி அழகி...நாளைக்கு வா...

அழகன்: இந்தாங்க அம்மா எல்லாமே வாங்கிட்டு வந்துட்டேன்...நீங்க சொன்னதெல்லாம் இருக்காணு பாத்துகோங்க...

அழகன் அம்மா : சரி தம்பி...அழகி இந்த நிகழ்ச்சிக்கு உன்ன நாளைக்கு வர சென்னா போய்ட்டு வா தம்பி...மேல் படிப்புக்கு உதவுமாம்...

அழகன்: அப்படியா! அழகி வந்தாலா இங்க... என்ன நிகழ்ச்சி அது காட்டுங்க...சரி அம்மா போய்ட்டு வரேன்.... நாளைக்கு நான் அந்த புது டிரஸ் போட்டு போகட்டா அம்மா?

அழகன் அம்மா : சரி தம்பி போட்டு போ....பத்திரமா போய்ட்டு வரனும்...

அழகன்: சரிங்க அம்மா....தொடரும்

எங்களது மற்ற படைப்புகள்:
காதலா! காதலா?
மற்றவை:

9 comments:

Pages