காதலா! காதலா? (பகுதி-5) |Kutty Story| - Kutty Story

Comments

காதலா! காதலா? (பகுதி-5) |Kutty Story|

Share This
    எல்லாருக்கும் வணக்கம் இன்னைக்கு தேதி என்ன தெரியுமா? 17ஆம் தேதி..... கல்யாணம் வேற இருக்கு இன்னிக்கு.... டைம் 5 மணி ஆச்சு.... இன்னும் இந்த அழகன் எந்திரிச்சானா?... இல்லையானு?... தெரியல?...ரூம் வெற பூட்டி இருக்கு.....என்னது யாரோட கல்யாணமா?.... ஓ... நீங்கலாம் புது நண்பர்களா?....சரி சரி..பகுதி-1 ... பகுதி-2.....பகுதி-3....பகுதி-4 இதுல இருக்கும்னு நினைக்கிறேன்.....போயிட்டு பாத்துட்டு இருங்க நான் போய் அழகனொட ரூம... தட்டி பாக்குறேன்.....


அழகன் அம்மா: தம்பி!!... தம்பி!! கதவ திற டைமாச்சு.... எந்திரி!!!!

அழகன்: (கதவைத்திறந்து)... அம்மா போலாமா?.....

அழகன் அம்மா: டேய் அழகா என்ன இது அதுக்குள்ளே ரெடி ஆயிட்ட....எப்படா எந்திரிச்ச?....

அழகன்: 4:30 மணிக்கு மா.... நீங்க இன்னும் கிளம்பலையா?... எப்ப கிளம்ப போறீங்க?...

அழகன் அம்மா: டேய் தம்பி என்னடா அதிசயமா இருக்கு நான் எப்படியாச்சும் எழுந்திருக்கச் சொன்னா... கொஞ்சம் கூட கேக்க மாட்ட இப்ப எப்படி?....

அழகன்: அம்மா!... பிரண்டோட அக்காவுக்கு கல்யாணம்.. நேரமா போகனும்ல....

அழகன் அம்மா: பாருடா ஆமா ஆமா போகணும்....

அழகனின் உள் மனசு: ( கண்டிப்பா அழகி வருவாள்ள?.... வருவா! வருவா!... கண்டிப்பா வருவா...)

அழகன் அம்மா: சரி... நீ வெயிட் பண்ணு நான் ரெடி ஆகிட்டு வரேன் சரியா?.....

அழகன்: சரிமா சீக்கிரம் வாங்க!

(சில நிமிடங்கள் கழித்து)

அழகன் அம்மா: வா தம்பி போலாம்.... பஸ்லயே போலாமா?...

அழகன்: அம்மா லேட்டாயிரும்... ஆட்டோலயே போலாமே...!

அழகன் அம்மா: டைம் இருக்கு தம்பி 7:45 க்கு தான் முகூர்த்தம்...... இப்போ 6 மணி தான் ஆகுது.... சரி உன் ஆசைய ஏன் கெடுக்கணும் ஆட்டோலயே போலாம் வா...

*(அழகனும் அம்மாவும் திருமண மண்டபத்திற்கு சென்றனர்)*

அழகன்: அம்மா நீங்க பேசிக்கிட்டு இருங்க... நான் போய் என் பிரெண்ட்ஸ்லாம் பாத்துட்டு வரேன்...

அழகன் அம்மா: சரிடா.. கண்ணா!! போ...

அழகன்: டேய்!!.. அலங்காரம்லாம் நல்ல பண்ணி இருக்கீங்கடா... நம்ம கிளாஸ் பொண்ணுங்கலாம் யாரும் வரலையா?

நண்பன்: அப்படியா ரொம்ப தேங்க்ஸ் டா....எல்லாரும் வந்துருக்காங்க டா.... எனக்கு தெரிஞ்ச வரைக்கும்...

*(அழகன் அழகியை தேடத் தொடங்கினான்)*

மணமகனறை, மணமகளறை, மணமேடை, விருந்தினர்கள் என அனைத்திலும் தேட.....
கண்ணுக்குத்தெரியாத கற்பனை ஓவியம் அழகனின் மனதை அறுக்க.... அதை மருத்துவம் பார்க்க வருவாளா? என் தேவதை என்ற ஒரு ஏக்கம் அவனது மனதில்....ஆழமாக....

நேரம் போய்கிட்டே இருக்கு அழகிய காணல..... தூரத்துல ஒரு சத்தம்...அடியே! அழகி!!.. என் செல்லமே!! எப்படி இருக்க?.... டக்கென்று நின்ற இதயத்துடிப்புடன்... முகத்தை திருப்பி பார்க்க.... அது ஒரு பெண்... ஒரு குழந்தையை கொஞ்சிக் கொண்டிருக்கும் ஒரு காட்சி!!!! அடடா!! என்ன ஒரு ஏமாற்றம்....அது அவனை மேலும் வருத்தியது.....

(சில நிமிடங்கள் செல்ல... திருமணம் சிறப்பாக நடந்தது)

அழகன் அம்மா: வா அழகா...! சாப்பிட போலா....

அழகன்: தோ வரேன் மா ( இருவரும் பந்தியில் அமர்ந்தனர்)

(அந்த வருத்ததுல சாப்பாடும் எறங்கல.... ஒன்னும் எறங்கல.... எழுந்து கை கழுவச் போனான்..... அங்க கை கழுவும்போது நிமிர்ந்து தன் முகத்த கண்ணாடியில பாக்க .... அவனுக்குப் பின்னால அழகி.... அவன் சட்டுனு திரும்ப...அங்க யாருமே இல்ல....இது கணவா என்ற ஏக்கத்தின் உறக்கத்தில் மூழ்கி ய அழகன்.... நண்பனிடம் சொல்லிட்டு...அக்காவுக்கு வாழ்த்துக்கள் சொல்லி வீட்டுக்கு கிளம்பினர் அம்மாவும், அவனும்...)



( சோகத்துல இருந்த அழகனொட முகத்த பார்த்து)

அழகனின் அம்மா
: ??????........

என்ன? கேட்டு இருப்பாங்கன்னு என்னய கேட்டா எனக்கு என்ன தெரியும்....கேக்கலாம்னு போயிருக்காங்க.... அதுக்குள்ள இந்த அழகன் முகம் கழுவ போயிட்டானாம்.... அவன் வரதுக்கு கொஞ்ச நேரமாகும்...அப்புடி என்ன கேட்டுறுப்பாங்கனு.... நாளைக்கு பாக்கலாம்... 

காதல் மலருமா? என்ற காத்திருப்புகளுடன் மீண்டும் அடுத்த பகுதியுடன்.

6 comments:

  1. Thirumbavum kathiruppaaa..........

    ReplyDelete
    Replies
    1. பொறுமை என்றும் பெருமையை தேடி தரும் என் தோழியே.....

      Delete
  2. நண்பா அருமை srithar👍👍👍

    ReplyDelete

Pages