காதலா! காதலா? (பகுதி-31) | Kutty Story | Tamil Love Story Novel | - Kutty Story

Comments

காதலா! காதலா? (பகுதி-31) | Kutty Story | Tamil Love Story Novel |

Share This

காதலா! காதலா? (பகுதி-31)


எல்லாருக்கும் வணக்கம்..... எல்லாரும் கதைய விரும்பி படிக்குரிங்களா?.... படிப்பிங்கனு நெனைக்குறேன்...... படிக்கலனா.... எல்லாரும் படிங்க.... இப்போதான் கதை கொஞ்சம் சுவாரசியமா போகுது...... சரி அன்னிக்கு எதோட முடிச்சோம்...... அழகி கூட பேச கூடாதுன்னு.... அர்ஜுன் அழகன் கிட்ட சொல்லிருந்தான்.... அதுக்கு அப்புறம் என்ன ஆயிருக்கும்.... வாங்க பாக்களாம்..... அன்னிக்கு பகுதிய நீங்க யாராச்சும் படிக்கலனா.... கீழ குடுக்குறேன் பொய் படிச்சிட்டு வாங்க..... முந்தைய பகுதி

அழகி: ரிதம்.... ஏன் அழகன் என்னய பாக்காம போனான்....
 
ரிதம்: நீ என்ன!! பிள்ளையாரா??? உன்ன தினமும் பாத்து கும்பிட்டு போறதுக்கு....

அழகி: உன்கிட்ட கேட்டேன் பாரு!!!! என்னய செருப்பால அடிக்கணும்....
 
ரிதம்: SORRY நான் செருப்பு போடல..... சூ தான் போட்ருக்கேன்.... ஆமா அர்ஜுன்  காலேஜ் வந்துருப்பானா????

அழகி: என்னேட செருப்பும் ரூம்ல தான் இருக்கு..... தேவ படும் போலயே....

ரிதம்: சரி சரி விடு..... பாடத்த கவணி........

(அழகன் அர்ஜுனிடம் பேசிக்கொண்டிருப்பதை கவனித்த STAFF அழகனைப் பார்த்து...)

STAFF : அழகன்!!!!...... கிளாஸ் கவனிக்க விருப்பம் இல்லனா வெளிய போ..... பேசுறதுக்கு இங்க எடம் இல்ல......

அழகன்: நான் வெளியே போறேன் மேடம்...... ( அப்படா எப்புடியோ அர்ஜுன் நம்ம கூட வரல நாம எப்புடியோ போய் அழகிய பாத்து பேசிட்டு வந்துரலாம்).....

STAFF : get out ...........!!!!!!

அழகன்: மச்சா.....  நான் போய்ட்டு வரேன்..... கிளாஸ்ல என்ன சொல்லுறாங்கனு கேட்டுட்டு வந்துரு......பாய்!!!
 
அர்ஜுன் : போகதடாா.... போணினா......ஷர்ட்ட கிழிச்சுருவேன்.....
 
அழகன்: விடுடா ..... நான் போகனும்.....

STAFF : அர்ஜுன் !!!!!!!!!!......... Get Out Both Of You....

அர்ஜுன் : நன்றி மேடம் ....

STAFF : What..?.........??????

அர்ஜுன் : நான் இல்ல..... அழகன் தான் மேடம்......

STAFF : ஒலுங்கா கெளம்ப போறிங்களா?? இல்லையா?? ரண்டு பேரும்.....

அழகன்: என்ன கொஞ்சம் நேரம் சும்மா விட மாட்டியே!!!!
 
அர்ஜுன் : அது எப்டி மச்சா.... உன்ன தனியா  விட முடியும்..... நீ யாரு ஏன் நண்பேண்டா........

அழகன்: டேய்.......!!! வாய்ல நல்லா வருது..... ஒழுங்கா இருந்துக்கோ...... என்ன கெளறாத......

அர்ஜுன் : சரி... சரி.... விடு மச்சி.... Chill......

(அழகன் கிட்ட பேசாத வருத்தில் அழகி..... ரிதத்தை.... வறுத்துக்கொண்டிருந்தால் ....)

அழகி: ரிதம்......!!!! அழகன்  என்ன பண்ணிட்டு இருப்பான்???? ... ஒருவேள..... அவனுக்கு  உடம்புகிதும் சரியில்லயோ ? 

ரிதம்: அம்மா!!! தாயே!!! அவங்க வீட்டுல கூட இப்படி கவல படமாடாங்க..... ரெம்ப பண்ணாத..... அந்த நாய் எதாவது பொண்ணுங்க பின்னாடி போய் வால ஆட்டிகிட்டு இருக்கும்....

அழகி:ஏய்!!!!! அவன நீ....திட்டாத..... நான் மட்டும் தான் திட்டுவேன்......!!!

ரிதம்: ஐயோடா!!....... ஏன் நீ என்ன காதலியா....?????

அழகி: ச்சீ..... ஏன்டி பிரன்ட்ஸ்ஸ தப்பா பேசுற......???

ரிதம்: ஓஓஓஓ.... அப்டிங்களா???? ....சரிங்க மேடம்.....  மண்ணிச்சுருங்க!!!

அழகி: ஈவ்னிங் போய் பாக்கணும் அவன......

(போகாத.... நேரத்தை..... போக சொல்லி வேண்டிக்கொண்டு.... மாலைப்போழுதுக்காக காத்துக்கொண்டிருந்தாள்....)

(நேரம் ஓடியது.....டைம் ஈவ்னிங்..... 3:50 PM....)

அழகன்: சரி மச்சா....கிளாஸ் முடியப் போகுது..... நீ ஹாஸ்டல் போ நா அப்புறமா வரேன்.......சரியா?....
 
அர்ஜுன் : தம்பி...... மாமா...... எனக்கு ஏற்கணமே காது குத்தியாச்சு.........
 
( ஈவ்னிங்...... காலேஜ் ஓவர் ) 
(எல்லோரும் வெளிய கெளம்பி போறாங்க....)
(அழகி.....அழகன பாக்குரதுக்காகவே....ஓடி வரா.....)

அழகி: ஹேய் அழகா ........ நில்லு.....

அழகன்: ஐயோ!!! வராலே...... அர்ஜுன் வேற போமாட்டேனு சொல்லுறான்....

அழகி: என்னடா???? பண்ணி....... நாயே...... கூப்பிட்டாகூட..... நிக்க மாட்டியா??

( தலை குனிந்த படியே நின்றான் அழகன்.....)

அழகி: டேய்!!!! பேசுடா... அர்ஜுன் என்ன ஆச்சு இவனுக்கு.....

அர்ஜுன் : தெரியலையே கிளாஸ் பொண்ணுங்க கூடலாம் நல்லா ஜாலியாதான் பேசிட்டு இருந்தானே......

அழகி: ஓஓ...( கண்ணீருடன் ) சரிடா நான் போரேன்.......

அழகன்: ( மனசுக்குள்) என்ன மன்னிச்சுரு அழகி.......

அழகன்: டேய்..... மச்சா.....ஏண்டா அவ கிட்ட அப்டி சொன்ன?...... அவளுக்கு கொழந்த மனசுடா.... அழுவாடா.....

அர்ஜுன் : மச்சா..... விடு எல்லாம் சரியா போயிரும் இன்னும் 9 நாள் பொறுத்துக்கோ....

( இருவரும் ஹாஸ்டல்க்கு  திரும்பினர் ) 

அர்ஜுன் : மச்சா..... வாடா சாப்ட போலாம்..... 

அழகன்: நா வரல மச்சா.... பசிக்கல....... நீ போய்ட்டு வா.....

அர்ஜுன் : மச்சி..... அழகி கிட்ட பேசலனு வருத்தமா??.... Love ல இதான் பிராப்ளம்.... நம்ம பண்ணுறது Love nu தெரியாமயே நாமா Love பண்ணிக்கிட்டு இருப்போம்.....

அழகன்: மச்சா  இல்லடா!!! இது காதல் இல்லடா... புரிஞ்சுக்கோ....... 

அர்ஜுன் : சரி..... வா சாப்பிடலாம்......

அழகன்: இல்லடா..... நீ போ......

அர்ஜுன் : டேய் ஒழுங்கா வந்துரு இல்லன அவளுக்கு போன் பண்ணி.... யாரோ ஒரு பொண்ணுகிட்ட போன்ல கடல போட்டுட்டு இருக்காணு சொல்லிருவேன்.....

அழகன்: டேய்.... மச்சா வெளையாடாதடா.......

(அழகியோட ரூம்ல..... அழகி..... அழுதுகிட்டு..... இருக்கா)

ரிதம்: டீ... அழகி..... என்னடீ.... இப்புடி அழுவுற..... அவன love பண்ணுறியா டி.....???

அழகி: ரிதம்.... அதெல்லாம் ஏதும் இல்ல ரிதம்....... நாங்க சின்ன வயசுல இருந்து..... FRIENDS..... அவன் என்கிட்ட பேசாம இருக்க மாட்டான்.... என்னனு தெரில......

ரிதம்: சரி...... விடு.... வா சாப்பிடலாம்......

அழகி: .... ரிதம்.... எனக்கு வயிறு வலிக்குற மாதிரி இருக்கு.... நீ போய் சாப்பிடு.... நான் பிஸ்கட் வச்சுருக்கேன் அத சாப்பிட்டுக்குறேன்....

ரிதம்: டீ..... தொடரும்.....


மீண்டும் சில காதல் வரிகளுடன்.... சந்திப்போம்....  அடுத்த பகுதியில்...

No comments:

Post a Comment

Pages