காதலா! காதலா? (பகுதி-11) |Kutty Story| tamil love story novels | - Kutty Story

Comments

காதலா! காதலா? (பகுதி-11) |Kutty Story| tamil love story novels |

Share This
    அனைவருக்கும் காதல் வணக்கம்... நேத்து வேற ரெண்டு பேரும் கோவிலுக்கு போனாங்க.... எதுக்குன்னு கேட்டதுக்கு ஏதோ அர்ச்சனை பண்ணனும்னு சொன்னாங்க.. அதையும் விடாம எதுக்கு அந்த அர்ச்சனைனு கேட்டேன்... அவங்க நல்லா படிக்கணுமாம்...  அதுக்கு தான் அர்ச்சனை பண்ணுராங்கலாம்.... யாரு கோவிலுக்கு போனாங்கன்னு கேட்டீங்கன்னா... கடிச்சு வச்சிருவேன். காதலா! காதலா? இதுல போய்ட்டு பாருங்க யாரு கோவிலுக்கு போனாங்கன்னு... அப்புறம் கோவில்ல என்ன நடந்துச்சுன்னு பாக்கலாம்....

*(சிரித்துக்கொண்டே இருவரும் கோவிலுக்கு சென்றனர்)*

அங்க போய்ட்டு அர்ச்சனை சீட்டு கொடுக்குற வரிசையில நின்னு ஒரு சீட்டை வாங்கிட்டு அதோட... அர்ச்சனைக்கு தேவையான பூ , பழம் , தேங்காய்லாம் வாங்கிட்டு கோவிலுக்குள்ள போனாங்க ... அங்கிருந்த அர்ச்சகரிடம் அதனைக் கொடுத்தாள் அழகி... 

அர்ச்சகர்: நமஸ்து..... எவ்வாளுக்கு அர்ச்சனை செய்யணும்.... 

அழகி: பெயர்.... அழகன்-அழகி, நட்சத்திரம்..... உத்திராடம் - உத்திரட்டாதி....

அர்ச்சகர்: அடடா!!! என்ன ஒரு பேர்-நட்சத்திர பொருத்தம்.... நன்னா..  ஷேமமா!! இருங்கோ!!!

(சொல்லிட்டு அர்ச்சகர் கருவறைக்குள் சென்றார்)

(உடனே தனக்கு எதிரே நின்றிருந்த அழகியின் முகத்தை பார்க்க முடியாத வெட்கத்தின் வேட்கையால் அழகனும்.... அந்த வெட்கத்திற்கு ஈடுகொடுக்க முயலாத அழகியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள... அவ்விருவர் கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தது....) 

(பூஜை முடிந்ததும் அழகி தனது நெற்றியில் திருநீறை வைத்துக் கொண்டு ... அழகன் நெற்றியில் வைத்து விட.... அதிலிருந்து சில துகள்கள் அழகனின் கண்ணில் விழ... சாரி அழகானு சொல்லிட்டு தனது கையை அவனது நெற்றியில் வைத்து மெதுவாக ஊத... அக்கணமே அழகனுக்கு அவன் தலை மீது காதல் தேவதை நடனமாடியது)

அழகி: அழகா!!!! சரி நேரமாயிடுச்சு கிளம்பலாம்..... 

அழகன்: நேரம் ஆயிடுச்சா!!!!! அதுக்குள்ளவா???

(என்ன ஒரு வருத்தம்.... டைம் போனது கூட தெரியல பாருங்க அவனுக்கு) 

அழகி: ஆமாடா டைம் பாரு 3 மணி...  4 மணிக்குள்ள வீட்ல இருக்கணும்....

அழகன்: போகனுமா?... சரி.. அழகி.............................

அழகி: ஆமாடா.... போகணும்.....

(ஏதோ ஒன்றை தற்காலிகமாக தொலைத்தது போல ஒரு ஏக்கம் அவனது மனதில்)

அழகன்: ம்ம்.... சரி டாட்டா....

(அழகன் வந்து கொண்டிருக்கும் வழியில் அவனது பக்கத்து தெரு சீனியர்-வெங்கட், அழகனைப்பார்த்து....)

வெங்கட்: தம்பி!! எப்படி இருக்க... ரிசல்ட் வந்திருச்சு... என்ன பண்ணலாம்னு பிளான்?....

அழகன்: அண்ணா!! விஸ்காம் எடுக்கலாம்னு இருக்கேன்னா....

வெங்கட்: சூப்பர் டா! தம்பி!!!.... நல்லா படி... எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியா?

அழகன்: என்ன ஹெல்ப்னா???....

வெங்கட்: தம்பி நானும் விஸ்காம்தா படிக்கிறேன்.... என்னோட லாஸ்ட் இயர் ப்ராஜெக்ட்ல ஒரு ஷார்ட் பிலிம் எடுத்து காட்டணும்... ஹீரோவுக்கு ஆள் எவ்வளவு தேடியும் கிடைக்கல.... நீயும் விஸ்காம் படிக்குறனு சொல்லுற உனக்கும் கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும்ல... உன்னால என்னோட படத்துக்கு ஹீரோவா ஏக்ட் பண்ண முடியுமா?... 

அழகன்: அண்ணா!!!! ஹீரோவா? நானா?.....

வெங்கட்: ஆமா தம்பி!!! கொஞ்சம் யோசிச்சு பாரு உனக்கும் யூஸ்ஃபுல்லா இருக்கும்....

அழகன்: அண்ணா!! நான் யோசிச்சி நாளைக்கு சொல்லுறேன்னா....

வெங்கட்: சரி தம்பி!! அப்படியே உன் பிரெண்ட்ஸ்ல யாராச்சும் விருப்பம் இருந்தா கூட்டிவா தேவப்படுறாங்க....

அழகன்: சரிங்கண்ணா....

*(இரவு அழகன் வீட்டில்)*

அழகன்: அம்மா!! என்னய ஷார்ட் பிலிம்ல ஹீரோவா நடிக்க கூப்பிடுறாங்க பக்கத்து தெரு வெங்கட் அண்ணா....! போகட்டுமா???

அழகன் அம்மா: அதெல்லாம் ஒன்னு வேணா....

அழகன்: அம்மா நானும் விஸ்காம்தான படிக்கப் போறேன்.... எனக்கும் கொஞ்சம் யூஸ்புல்லா இருக்கும்மா... ப்ளீஸ்மா....!

அழகன் அம்மா: அப்படியா?... சரி என்னமோ பண்ணு தம்பி.....

அழகன்: அம்மா!!!!.... ரொம்ப தேங்க்ஸ்மா.... Love you ma....

அழகனின் மனசு: அழகியையும் கூட்டிட்டு போலாம்... அவளும் வந்து ஏதாச்சும் நடிக்கட்டும்...

*(அடுத்த நாள் அழகன் அழகியை சந்தித்து)*

அழகன்:ஹேய் அழகி!!!... உன்னைய படத்துல நடிக்க வைக்கப் போறேன்...

அழகி: ஹேய்!!... ஃபிராடு!!!.... என்னடா சொல்லுற!! உன்னோட படமா?

அழகன்: இல்ல அழகி... எனக்கு தெரிஞ்சவங்களோட ஷார்ட் பிலிம் ஆனா நான் தான் ஹீரோ....!

அழகியின் மனசு: அப்ப கண்டிப்பா என்னத்தான் ஹீரோயினா நடிக்க வைப்பான் செம ஜாலி....

அழகி: சூப்பர்டா!!! ....அழகா!!... நானும் வரேன்....

*(சில நாட்களுக்குப் பிறகு)*

அழகனும், அழகியும் சூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றனர்... அங்கு ஹீரோயினோட இடத்துல பாத்தா வேற ஒரு பொண்ணு... பார்த்ததும் நெருப்பு மேல நிற்கிறது போல ஒரு உணர்வு அழகியிடத்தில்... மேலும் வெங்கட் அழகனிடம்.... அழகியைப்பார்த்து... இவங்க தான் உன்னோட ப்ரெண்டா அழகா???... வா...மா... வந்து ஹீரோயின் கூட நில்லு... நீதான் ஹீரோயினோட ப்ரண்டு.... 

அதைக்கேட்டதும்.... 


அழகி: .....

    என்ன நண்பர்களே அழகி எவ்ளோ ஆசையா போனா!!... அழகனோட ஹீரோயினா நடிக்கலானு!!... கடைசில இப்படி ஆயிருச்சே!!... ஏற்கனவே அந்த ஹீரோயின பாத்ததும் அழகி செம்ம டென்ஷன் ஆயிட்டா.... இதுல வேற அந்த வெங்கட் பையன்.... ஹெரோயினுக்கு  ப்ரெண்டா நில்லுன்னு சொல்லிடான்... எவ்ளோ டென்ஷன் ஆனாலோ தெரியலையே.... அவ டென்ஷன் ஆனதுல உங்க போன் ஹீட் ஆயிருச்சு பாருங்க ....போய்ட்டு உங்க போன கூல் பண்ணுங்க... நாம நாளைக்கு பாக்கலாம்... அழகிக்கு அந்த எடத்துல எப்புடி இருந்துருக்கும்னு நீங்க நெனைக்குரிங்க மறக்காம கமெண்ட் பண்ணுங்க.... அப்புறம் இந்த கத உங்களுக்கு புடிச்சிருந்தா மறக்காம எங்களோட Kutty story ya.... FOLLOW பண்ணுங்க.... அப்போதான் யார் யாருலாம் எங்களோட கதைய படிக்குரிங்கனு எங்களுக்கு தெரியும்.....கதை எழுதுறதுக்கும் விருப்பமாவும் இருக்கும்..... சரிங்க நண்பர்களே.... மீண்டும் சில கோப வரிகளுடன்.... சந்திப்போம்.... அடுத்த பகுதியில் அதுவரை பிரியாத்  துயரை உங்களிடம்  பெற்று.... அந்த துயரிலே....அன்பெனும் மணத்தை  நுகர்ந்து.... அந்த மணத்திலே.... உயிர் பெற்று.... அந்த உயிரிலே துடித்துக் கொண்டிருக்கும்.... சில  வண்ணத்துப்பூச்சிகள் .... உங்கள் DonTechoMix

2 comments:

Pages