எல்லாருக்கும் வணக்கம்....எப்புடி இருக்கீங்க.... எல்லாரும் நல்ல இருக்கீங்களா?..... அதெல்லாம் நல்லா இருப்பிங்கனு நம்புறேன்.... *சரி நேத்து அழகிக்கு வேற ஒரே குழப்பம்... அதுக்கு காரணம் அழகனா..... இல்ல... யாருடா அப்புடி பண்ணிருப்பாங்கனு பொலம்பிட்டு இருக்கா ... தயவு செஞ்சி.... என்ன ஆச்சின்னு மட்டும் கேக்காதீங்க நானே கொடுத்துட்டேன் ... காதலா! காதலா? ... இதுல போயிட்டு என்ன ஆச்சின்னு படிச்சிட்டு வாங்க அப்பறமா இன்னிக்கு என்ன ஆக போகுதுனு பாக்கலாம்.... சரியா ???
அழகியின் மனசு: அது என்ன அவ்ளோ பெரிய காலேஜா!!!...ரொம்ப சீனா இருக்கே.... அழகி கொட்ட முடியாத சந்தோசத்துடன்...இது கண்டிப்பா அழகனோட வேலயாதான் இருக்கும்....... நாளைக்கு அவன் வரடும் பேசிக்கிற .....
(கடைசில அழகிய இப்படி பொலம்பவிட்டிங்களே ..... நைட்டு சாப்பிட்டாளாணு கூட தெரியல ....இப்படியே பொலம்பிட்டு... அப்படியே தூங்கிட்டா!!!!!)
(பொழுதும் விடிஞ்சி போச்சு .... ஆனா அழகியோட குழப்பம் மட்டும் போகல..... அழகன் வரட்டும் அவனாதான் இருக்கும் வேற யாரும் இல்லனு முடிவு பண்ணிட்டு.... எப்போ வருவான்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தா....
(ஒரு 10:00 மணி இருக்கும்......அழகன் அழகியோட வீட்டுக்கு வந்தான் .... )
அழகி : வாடா!! .... வா!! .....உள்ள வா....!!
அழகன் : ஹாய் அழகி!! ....என்ன அழகி?....ரொம்ப கோவமா இருக்க போலயே .... ஏன் உங்க அப்பா உன்ன அடிச்சுடாரா ????
அழகி : இல்லடா!!.... ஒரு கொரங்கு எங்க அப்பா கிட்ட கண்டதையும் சொல்லி...எல்லாத்தையுமே மாத்தி வச்சுருக்கு....
அழகன் : அப்படியா!! ....யாரு அந்த கொரங்கு ?... என்னத்த மாத்தி வச்சுருக்கு ???
அழகி: அது ஒரு ஃபிராடு கொரங்கு..... எல்லாமே மாறிடுச்சு அவனால....!!
அழகன்: அப்படியா?..... அது என்னனு எனக்கு கொஞ்சம் சொல்லுவியா அழகி.....
அழகி : அத விடு.... அழகா ...வா நாம ஒரு இடத்துக்கு போயிட்டு வரலாம்.....
அழகன்: என்ன கூட்டிட்டு போறியா அழகி....ஐ ஜாலி!!!... எங்கனு சொன்னினா.... கொஞ்சம் நல்லா இருக்கும்...
அழகி: அது......... ஒரு கோவிலுக்கு போகணும்டா ....
அழகன் : கோவிலுக்கா...? எதுக்கு அழகி...? ஏதாச்சும் விசேஷமா....?
அழகி : அதுவா!... அதுலாம் எதும் இல்லடா .... எங்க அப்பா கிட்ட கண்டதையும் சொல்லி அவரோட எண்ணத்த மாத்தி வச்சுருக்குல ஒரு கொரங்கு ..... அந்த கொரங்குக்கு... முட்டைல மந்திரம் பண்ணி வச்சா..... அது ரத்த வாந்தி எடுத்து செத்துரும்ல ..!!!! அது செத்த அப்பறம் யாருனு கண்டு புடிச்சிறலாம்..... எப்புடி என்னோட ஐடியா...!
அழகன் : ( ரொம்ப பயத்துடன் ) அந்த குரங்கு அப்பாகிட்ட என்ன சொல்லுச்சு சொல்லு அழகி ....
அழகி : அது!!!!!!..... நீ படிக்க போற காலேஜில என்னயும் படிக்க வைக்க சொல்லிருக்கு...
அழகன் : ஐயோ!!.... அழகி!! அந்த கொரங்கு நான் தா ...என்ன எதுவும் செஞ்சிராத... ப்ளீஸ்...
அழகி : எனக்கு அப்போவே ... உன்ன பத்தி தெரியும்டா!!... நீதான் அப்புடி பண்ணிருப்பனு .....சரி... எப்படி எங்க அப்பா கிட்ட பேசுனனு செல்லு .... இல்லனா முட்ட மந்திரம் தா....பாத்துக்கோ...
அழகன் : ஹ ஹா.... அதுவா......டீ கடைல உங்க அப்பா, அப்புறம் நம்ம கிளாஸ் பிரண்ட்ஸோட அப்பாலாம் இருந்தாங்க ... நான் அங்க போய் பாஸ் ஆயிட்டேன்னு சொல்லி சாக்லேட் குடுத்த... அப்புறம் எங்க காலேஜ் பத்தி கொஞ்சம் சீன் போட்டேன்... எல்லா படிப்புமே இருக்கு அதுல... குறிப்பா அங்க சிவில் இஞ்சினியரிங் தான் ஸ்பெஷல்... கடைசி வருஷம் படிக்கும்போதே வேலைக்கு எடுத்துப்பாங்களாம்... எனக்கு சிவில் கெடைக்கல அதான் இந்த படிப்பு எடுத்தனு சொன்ன ... அவ்ளோதான்....
அழகி : இதுக்குலாம் எங்க அப்பா மசியமாட்டாரே .... டேய் ஒழுங்கா சொல்லு ....என்ன சொன்ன ???
அழகன்: .... அது வந்து.... என்னனா!!!...... அங்க படிச்ச நிறைய பொண்ணுங்களுக்கு அரசு வேலை கிடைச்சிருக்கு ... அதுக்குலாம் ஸ்பேஷல் வகுப்பு எடுக்கராங்கனு....சொன்ன...
அழகி : அட பாவி டேய்..... செம்ம டா...ஆனா நீ மாட்ட போற எங்க அப்பா கிட்ட ஒருநாள் ...
அழகன் : இல்லடீ .....நெஜமாவே அங்க அதுக்கு பயிற்சி தறாங்க... உன்னோட நல்லதையும் மனசுல வச்சி தான் சொன்ன...நா என்ன உன்ன மாதிரி லூசுன்னு நினைச்சியா????
அழகி : அப்படிங்களா!! சரிங்க சார்... அதெல்லாம் இருக்கட்டும் வாங்க கோவிளுக்கு போலாம் ......
அழகன் : நான் தா உண்மைய சொல்லிடனே அப்புறம் எதுக்கு .....வெனாடீ.... ப்ளீஸ்...
அழகி : அட லூசு ...நாம நல்லா படிக்கனும் சாமிக்கு அர்ச்சனை பண்ணலாம் வா...... அப்புறம் ஒன்னு உன் மேல இருக்குற பாசத்தால ஒன்னும் கோவிளுக்குலாம் போகல..... சரியா???.... ஓவரா சீன் போட்டுக்காத!!
அழகன் : அப்படியா!!! மேடம் சரிங்க................
......( சிரித்துக் கொண்டே இருவரும் கோவிளுக்குச் சென்றனர் )......
ஒரு வழியா ரெண்டு பெரும் சேந்து கோவிலுக்கு போயிருக்காங்க .... இதுக்கு அப்பரமாச்சும் ரெண்டு பேருக்கும்... தெய்வீக காதல் தொடங்கிருக்குமா?.... தெரியலையே!!!..... சரி கோவில்ல என்ன நடந்துச்சின்னு நாளைக்கு பாக்கலாம்..... காதலா! ......இல்ல..... காதலா????? நீங்க என்ன நினைக்குரிங்கனு மறக்காம கமெண்ட் பண்ணுங்க....அப்புறம் எங்களோட கத உங்களுக்கு புடிச்சிருந்தா மறக்காம எங்களோட Kutty story ya.... FOLLOW பண்ணுங்க.... அப்போதான் யார் யாருலாம் எங்களோட கதைய படிக்குரிங்கனு எங்களுக்கு தெரியும்.....கதை எழுதுறதுக்கும் விருப்பமாவும் இருக்கும்..... சரிங்க நண்பர்களே.... மீண்டும் சில காதல் வரிகளுடன்.... சந்திப்போம்.... அடுத்த பகுதியில் அதுவரை பிரியாத் துயரை உங்களிடம் பெற்று.... அந்த துயரிலே.... அன்பெனும் மணத்தை நுகர்ந்து.... அந்த மணத்திலே.... உயிர் பெற்று.... அந்த உயிரிலே துடித்துக் கொண்டிருக்கும்.... சில வண்ணத்துப்பூச்சிகள்.... உங்கள் DonTechoMix
எங்களது மற்ற படைப்புகள்:
மற்றவை:

Oru valiya same college select panneyacha...... Super.....
ReplyDeleteEvery day vum story intrust ah eluthuringley neenga film ku kadha eluthuringla........
இப்படியெல்லாம் கேக்குறதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.... நீங்க எடுங்க படம் எங்களோட கதைய வச்சி.... நாங்க இன்னும் ரொம்ப சந்தோச படுவோம்....
Delete