காதலா! காதலா? (பகுதி-12) |Kutty Story| tamil love story novels | - Kutty Story

Comments

காதலா! காதலா? (பகுதி-12) |Kutty Story| tamil love story novels |

Share This
    வணக்கம் நண்பர்களே... நேத்து ஒரு நாள் தான் உங்கள பாக்கல... ஆனா ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு.... எல்லாரும் எப்படி இருக்கீங்க..? நல்லா இருக்கீங்களா?... சரிங்க நண்பர்களே! சனிக்கிழமை என்ன நடந்துச்சு.... அந்த சூட்டிங் ஸ்பாட்டுக்கு போனாங்க அதோட தானே முடிச்சோம்... எனக்கே லைட்டா மறக்குற மாதிரி இருக்கு... சரி வாங்க காதலா! காதலா? எல்லாரும் போய் படிச்சுட்டு வரலாம்... 

அழகனும், அழகியும் சூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றனர்... அங்கு ஹீரோயினோட இடத்துல பாத்தா வேற ஒரு பொண்ணு... பார்த்ததும் நெருப்பு மேல நிற்கிறது போல ஒரு உணர்வு அழகியிடத்தில்... மேலும் வெங்கட் அழகனிடம்.... அழகியைப்பார்த்து... இவங்க தான் உன்னோட ப்ரெண்டா அழகா???... வா...மா... வந்து ஹீரோயின் கூட நில்லு... நீதான் ஹீரோயினோட ப்ரண்டு.... 

அதைக்கேட்டதும்.... 

அழகி: அழகனை கோவத்துடன் முறைத்தபடி... என்னது!!.... நான் தோழியா நடிக்கிறதா?...

வெங்கட்: ஆமாமா!!... அழகி!!... ஏன்? அழகன், உங்கிட்ட சொல்லலையா?....

அழகி: என்னால முடியாது!!... அதுக்கு வேற ஆள பாருங்க... என்கிட்ட இப்படித்தான் நடிக்கணும்னு அவன் எதும் சொல்லல....

வெங்கட்: மா!!... சரி விடுமா!!... தோழியா தான.... நடிக்க வைக்கப் போறோம்... வில்லியா நடிக்க வைக்கலையே!...

அழகி: கோவத்துடன்... போதும்!!... எதுவும் சொல்லாதீங்க.... Sorry வெங்கட் அண்ணா!! என்னால நடிக்க முடியாது!....

அழகன்: திரும்பி அழகியை பார்த்து!!... ஏய் அழகி!! என்ன ஆச்சு?? எதுக்கு இவ்ளோ சத்தம் போடுற!!...

அழகி: அழகன் சார்!!... நான் ஹீரோயினோட தோழியாமே... நீங்க ஏதும் என்ட்ட சொல்லவே இல்ல...

அழகன்: அழகி!! உன்கிட்ட படத்துல நடிக்க வைக்கிறேன்னு தானே சொன்னேன்!!.. அப்புறம் என்ன?... அவரு கேட்டிருந்தாரு... பிரண்ட்ஸ் இருந்தா கூட்டிட்டு வரச்சொல்லி.... அதான் உன்னை கூட்டி வந்த....

அழகி: அப்டிங்களா சார் நம்பிட்டேன்...

அழகன்: அழகி!!... எதையும் முழுசா கேட்டுட்டு முடிவெடு....

அழகி: சும்மா நடிக்காதடா!!... போதும்.... இப்போவே என்ன ஒதுக்க ஆரம்பிச்சிட்டில....

அழகன்: ஏய்!!! எதுக்கு இப்படிலாம் பேசுற!!!....

அழகி: வேற எப்படி பேச சொல்லுற அழகா.... இருக்கட்டும்.... ஆனா ஒன்னு நீ என்கிட்ட ஒரு சத்தியம் பண்ணிருக்க அத நினைவில வச்சிகோ...!

அழகன்: ஏய்!!! லூசு மாதிரி பேசிட்டு இருக்காத... நான் எதுக்கு சத்தியம் பண்ண... இது வேற....

அழகி: ஆமாடா... நான் லூசு தான்... உன்ன அவ்ளோ நம்புனேன் பாரு எல்லாம் என் தப்புதான்....

அழகன்: அழகி.... நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளு.. ப்ளீஸ்...

அழகி: வேணாம்!... நீ எதும் சொல்லாத என்கிட்ட.... நீ என்ன ஏமாத்திட்ட அவ்ளோதான்.... அதான் உண்ம...

அழகன்: எதுக்குடீ... இப்படிலாம் பேசுற.... நான் எதுக்கு உன்ன ஏமாத்த போறேன்...!

அழகி: போதும்டா நீ எதுவுமே சொல்லாத.... நான் போறேன்... தயவுசெஞ்சி... இனிமே என் மூஞ்சிலயே முழிக்காத....

அழகன்: போடி..... போ.... பைத்தியம் மாதிரி கத்திட்டே போ... நான் போய் உன்ன இங்க கூட்டி வந்தேன் பாரு... என்னய சொல்லணும்....

(அழகி கோவத்துடன் அழுதுகொண்டே அங்கிருந்த நாற்காலியை இழுத்து எறிந்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள்)


அழகன்: வெங்கட் அண்ணா!... Sorry 
என்னால தான உங்க Project லேட் ஆகுது... ரொம்ப சாரினா....

வெங்கட்: பரவால்ல தம்பி...  இன்னைக்கு வேஸ்ட் ஆகல... என்னுடைய வேலைய சிறப்பாதான் செஞ்சிருக்கேனு தோணுது....

அழகன்: அண்ணா என்ன சொல்லுறீங்க எனக்கு ஒண்ணுமே புரியல....

வெங்கட்: அழகா அழகியோட இந்தக் கோவந்தான்... தோழியோட கதாபாத்திரத்துக்கு வேணும்... 

அழகன்: அண்ணா!.... ஆனா....!!!!!!!!!!!

வெங்கட்: தம்பி எப்படியாச்சும் அவள சமாதானப்படுத்தி இங்க கூட்டிவா அப்புறம் நாம பேசிக்கலாம்.....

அழகன்: அண்ணா புரியுது... ஆனா அவ ரொம்ப பிடிவாதம்... அதுவுமில்லாம நான் வேற திட்டிட்டேன்... சமாதானப்படுத்துறது ரொம்ப கஷ்டம்...

வெங்கட்: தம்பி.... முடிஞ்சளவுக்கு ட்ரை பண்ணு.... உன்னால முடியும்னு எனக்கு தோணுது....

அழகன்: சரிங்கண்ணா என்னால முடிஞ்சளவுக்கு ட்ரை பண்ணுறேன்...

வெங்கட்: சரி தம்பி....நீ இன்னைக்கு கெளம்பு... அவள சமாதானப்படுத்திட்டு வா... அப்புறம் பேசிக்கலாம்....

அழகன்: சரிங்கண்ணா வரேன்...

*(அழகனும் அங்கிருந்து தன் வீட்டிற்கு சென்று விட்டான்)*

*(அன்று இரவு அழகன் வீட்டில்)*

அழகன் அம்மா: தம்பி...! வா.... சாப்பிடலாம்

அழகன்: இல்லமா!! பசிக்கல நீங்க சாப்பிடுங்க... நா அப்றமா சாப்பிடுறேன்....

அழகன் அம்மா: தம்பி!! என்ன?? ஒரு மாதிரி இருக்க... என்னாச்சு!

அழகன்: அம்மா! அழகிய திட்டிட்டேன்மா....

அழகன் அம்மா: ஏன் தம்பி?... எதுக்கு திட்டுன?.... என்னாச்சு?....

*(நடந்ததை அம்மாவிடம் அழகன் கூறினான்)*

அழகன்: நான் வேணும்னு எதும் பண்ணலாமா... அதுவா இப்படி நடந்துருச்சு....

அழகன் அம்மா: அழகா!!  உன்னால தான் அவ ரொம்ப அழுகுறானு நினைக்கிறேன்.... எனக்கு தெரிஞ்சு இது இரண்டாவது தடவ....

அழகன்: அம்மா!!!......

அழகன் அம்மா: சரி விடு தம்பி!!.... நாளைக்கு நீ போய் பேசு... ரண்டு பெரும் பேசினா எல்லாமே சரியா போயிடும்....

அழகன்: ம்..ம்... சரிமா!!...

அழகன் அம்மா: சரி வா!... சாப்பிட்டு தூங்கலாம்....

அழகன்: ம்...ம்....

*(அன்றிரவு அழகி வீட்டில்)*

அழகி ஷோபாவில் அமர்ந்தபடி டிவியை ஆன் செய்தால்.... அப்போது ஒரு பாடல்... "என்னவனே என்னை மறந்தது ஏனோ?" இந்த பாடலை கேட்டவாறு சோகத்தால் கண்ணீர் விட்டபடி.... அப்படியே உறங்கினால்..............

என்னங்க அழகி இப்டி பீல் பண்ணிட்டு இருக்கா... அழகன் போய் பேசினா சமாதானம் ஆவாளா??.... நீங்க நெனைக்குரிங்க மறக்காம கமெண்ட் பண்ணுங்க.... அப்புறம் இந்த கத உங்களுக்கு புடிச்சிருந்தா மறக்காம எங்களோட Kutty story ya.... FOLLOW பண்ணுங்க.... அப்போதான் யார் யாருலாம் எங்களோட கதைய படிக்குரிங்கனு எங்களுக்கு தெரியும்.....கதை எழுதுறதுக்கும் விருப்பமாவும் இருக்கும்..... சரிங்க நண்பர்களே.... மீண்டும் சில கோப வரிகளுடன்.... சந்திப்போம்.... அடுத்த பகுதியில் அதுவரை

அன்பென்ற ஆணவத்தால் அடங்கி... பிரிவெனுமொன்றால் தனித்து காதலென்னும் துயரை உங்களிடம்  பெற்று.... அந்த துயரை உயிரென நினைத்து... அந்த உயிரிலே வீற்றிருக்கும் சில குரங்கு குட்டிகள்...உங்கள் DonTechoMix


3 comments:

  1. Macha Antha vedio highlightuu

    ReplyDelete
  2. Bro vedio semma eppaty ippaty lam........ Semma marana mass ..... I like that bro

    ReplyDelete

Pages