காதலா! காதலா? (பகுதி-29) | Kutty Story | Tamil Love Story Novel | - Kutty Story

Comments

காதலா! காதலா? (பகுதி-29) | Kutty Story | Tamil Love Story Novel |

Share This

காதலா! காதலா? (பகுதி-29)

வணக்கம் நண்பர்களே!! எல்லாரும் நலமா?.... நல்லா இருப்பிக்கிங்கனு நம்புறேன்... அன்னிக்கு எதோட முடிச்சோம் அழகனும், அழகியும் போன்ல WhatsApp ல பேசிகிட்டு இருந்தாங்க அப்புறமா ரண்டு பேரும் தூங்கிட்டாங்க.... இன்னிக்கு காலேஜ் போறாங்கனு நெனைக்குறேன்.... இன்னிக்கு காலேஜ் முதல் நாள் என்ன பண்ண போறாங்கலோ தெரியல வாங்க பாப்போம்... அன்னிக்கு பகுதி மறந்து போச்சினா அந்த பகுதிய கீழ குடுத்துருக்கேன் அதுல போய்ட்டு படிச்சிட்டு வாங்க அப்புறமா இதுல என்ன ஆச்சின்னு பாக்கலாம்..... முந்தைய பகுதி


அழகன்: ஹேய்!!!.... கருவாச்சி...... தூங்கிட்டியா....??

அழகி: டேய்!!!... என்னைய இன்னொரு தடவ கருவாச்சினு கூப்பிட்ட கொன்னே போட்டுருவேன்.....

அழகன்: அப்டிதாண்டி கூப்பிடுவேன்.... கருவாச்சி.... சாப்ட்டியா?

அழகி: நாளைக்கு வாடா உன்ன பேசிக்குறேன்.... சாப்பிட்டேன்.... நீ சாப்டியா....

அழகன்: hehehe.... நானும் சாப்பிட்டேன்.... சரி போய் தூங்கு....

அழகி: சரிடா... டாட்டா....

அழகன்: ம்ம்ம்ம்.... பாய்...... குட்நைட்....

அழகி: குட் நைட் டா......

(இருவரும் ஆழ்ந்த உறக்கத்திற்கு.... சென்று உறங்கினர்......)

(காலை விடிந்தது.... 7 மணி )

அர்ஜுன்: டேய்.... மச்சான்.... டேய் எழுந்திரி டா!! டைம் ஆச்சி... காலேஜ் போகனும்....

அழகன்: மச்சா... நீ போய் குளிச்சிட்டு வா..... வந்து எழுப்பி விடுடா... கொஞ்ச நேரம் தூங்குறேன்....

அர்ஜுன்: போடா.... போடா.... எனக்கென்ன நான் போய் குளிச்சிட்டு வரேன்....

(அர்ஜுன் சென்று குளித்துவிட்டு திரும்ப ரூம்க்கு வரான்.... அப்போவும் எழுந்திரிக்கல.....)

அர்ஜுன்: அடேய்!!.... டேய்!!!...... எழுந்து தொலடா......

அழகன்: விடிஞ்சுருச்சா??......

அர்ஜுன்: அட வெங்காயம்!!!..... இன்னும் 30 நிமிஷத்துல காலேஜ்......

அழகன்: அய்யோ..... எழுப்ப மாட்டியாடா?.....

(எழுந்து குளிப்பதற்கு துண்டை எடுத்துகொண்டு ஓடினான்....)

அர்ஜுன்: ஒரு வேல.... விடியுரதுக்குள்ள லூசாயிட்டானோ??....

(அழகன் குளிச்சிட்டு வந்த அப்புறமா இரண்டு பேரும் ஹொஸ்டல்ல சாப்பிட்டு காலேஜ்க்கு போய்டாங்க... )

(அழகி,, அழகனுக்கு கால் செய்து எங்க இருக்கடான்னு கேட்டா...)

அழகி: ஹலோ!!... டேய்.... எங்கடா இருக்க??...பண்ணி.... காலேஜ் கெளம்பிட்டியா? 

அழகன்: நான் காலேஜ் வந்து அர மணி நேரமாச்சு.... நீ தான் லேட்.... இன்னு வராம என்ன பண்ணிக்கிட்டு இருக்க.......

அழகி: தெரியும்டா டேய்!!!....... உன்ன பத்தி... முன்னாடியே போய் அங்க உன் டிபார்ட்மென்ட்ல இருக்க மொக்க பொண்ணுங்கள  போய் சைட் அடிச்சுட்டு இருப்பனு !!! இரு வரேன்......

ரிதம்: அழகி!! வா.... போலாம்... நான் ரெடி...

அழகி: போலாம்!!!! வா .. நேரமாச்சு....

(அழகியும், ரிதமும் காலேஜ நோக்கி புறப்பட்டனர்....)

ரிதம்: ஏய்... அழகி..... என்ன இந்த வழியில போற????

அழகி: அட ரிதம்.... வா நான் ஒரு வழியில கூட்டி போறேன்....

ரிதம்: லேட் ஆயிர போகுது அழகி.... டைம் இன்னும் 15 நிமிஷம் தான் இருக்கு.....

அழகி: டீ.... அந்த விஸ்காம் Department வழியா போனா சீக்கிரமா போய்டலாம்......வா ரிதம்... இன்னும் டைம் இருக்கு...

ரிதம்: ஓஓஓஓ..... சரி!!! சரி!!!..... வா வா போலாம்......

(அவுங்க ரண்டு பெரும் அந்த வழியே சென்றனர்.....)

(அழகனும், அர்ஜுனும் , வகுப்பு பொண்ணுங்க கூட அழகியோட iPHONEல ஃபோட்டோ எடுத்துகிட்டு இருந்தாங்க....)

அழகி: ரிதம்!! அங்க பாரு...... நான் சொன்ன நாய்.... அங்க எப்புடி வழிஞ்சுகிட்டு இருக்குனு பாரு....

ரிதம்: ஆமாடீ .... ஒரு நாய்னு சொன்ன.... ஆனா...அங்க... ரெண்டு நாய் இருக்கு.....

அழகி: தெரியல.... வா போய் பாக்கலாம்........

அழகன்: ஹாய் அழகி.......தனது கிளாஸ் பொண்ணுங்க கிட்ட, ஹேய் BEAUTIES  இவ தான் அழகி.... என்னோட Childhood Friend.....

அழகி: (ஹோ!!! ப்யூடீஸா...!!!!...okok) அழகா....  என்னோட ஃபோன குடு நானும், ரிதமும் ஃபோட்டோ எடுக்கனும்...

அழகன்: (எப்புடி சமாளிக்குராதுன்னு தெரியல....) உன்னோட ஃபோனா.....!!!!

அழகி: ஆமாடா!!...நீ தான் ஃபோன் வச்சி மாட்டிகிட்டு அசிங்க பட்டியே STAFF கிட்ட மறந்துடியா?????

கிளாஸ் GIRLS: Ok...Ok அழகா பாய்.... (வாங்கடீ  இவனுங்க வேஸ்ட்)

அழகன்: ஏன்டீ!!!!  என்ன அவமானப் படுத்த மட்டும் தேடி கண்டுபிடிச்சு வந்துருவியே!!!!
 
அழகி: அத விடு... இவதான் ரிதம்,, என்னோட ரூம் மேட்....
 
அழகன்: ஓஓஓஓஓ.. ஹாய் ரிதம்... I am AZHAGN Most Handsome Ever......

ரிதம்: அழகி!!! இது தான் அந்த நாயா.......

அழகன்:என்னது "இது தான் நாயாவா???? என்னயவா சொல்லுற?... என்ன பத்தி அழகி எதாவது சொன்னாலா ?.....

ரிதம்: SSSSSSSssssss

அர்ஜுன்: டேய்!!! அழகா!!!  நீ Handsome ஆ....."And actualy I am very decent and cute ARJUN... How are you Rythm " 

அழகி: ரிதம்!!!.... நீ சொன்ன இன்னொரு நாய் இதுவாடீ??......

ரிதம்: SSSSSSSssssss.... ஆமடீ!!!!!!!!!!!!!

அர்ஜுன்: நானும் நாயா???........ பேசுன  இங்கிலீஷ் லாம் வீணா போச்சே.... உன்னலதான்டா எல்லாமே...... அந்த அழகிகிட்ட சொல்லி வச்சிக்கோ.... ஒழுங்கா....
 
 அழகன்: விடு மச்சா!!!... அரசியல்ல இதெல்லாம்.... சகஜமடா......!!!


மீண்டும் சில காதல் வரிகளுடன்.... சந்திப்போம்....
அடுத்த பகுதியில்....


No comments:

Post a Comment

Pages