ஒரு ஊரில், ஒரு ஏழைக் குடும்பத்திலிருந்து படிப்பறிவில்லாத 24 வயது பூர்த்தியடைந்த வேலை தேடிக் கொண்டிருக்கும் ஒரு ஆண். அவன் பெயர் ராகுல்.அவன் ஒரு செய்தி தாளில் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் பணிக்காக கொடுக்கப்பட்ட விளம்பரத்தில் விண்ணப்பித்திருந்தான்.
சில நாட்களுக்குப் பிறகு அவனுக்கு கடிதம் ஒன்று வந்தது. அந்தக் கடிதத்தில் அவன் விண்ணப்பித்திருந்த கம்ப்யூட்டர் நிறுவனத்திலிருந்து இன்டர்வியூக்கு வரும்படி எழுதி இருந்தது.அதற்காக சேர்த்து வைத்திருந்த 100 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு அந்த நிறுவனத்தை நோக்கி சென்றான் ராகுல்.
அங்கு சென்று ஒரு நாற்காலியில் அமர்ந்தான்.சில மணி நேரம் கழித்து ராகுல் என்ற பெயர் தன் காதில் கேட்டதும் இதோ! வருகிறேன் ஐயா.. என்று கூறி எழுந்து சென்றான். அங்கு அவனை தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத்தான் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இன்டர்வியூ முடிந்ததும் கடைசியில் அவனிடம் தகவல் தெரிவிப்பதற்காக ஈ-மெயில் முகவரி கேட்டார்கள்.
அதற்க்கு அவன் ஈ மெயிலா? எனக்கு ஈ மொய்த்தால் துடைக்க மட்டுமே தெரியும்...ஈ-மெயில் எல்லாம் தெரியாதே! ஐயா!..என்றான். என்னடா?கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈ-மெயில் இல்லையா...ச்சே! நீ கெளம்பு என்று அவனை அனுப்பி விட்டார்கள்.
வேலை கிடைக்கவில்லை என்ற துக்கத்துடன் என்ன செய்வதென்று தெரியாமல் கையில் இருந்த நூறு ரூபாய்க்கு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான். 30 ரூபாய் லாபம் கிடைத்தது. மீண்டும் வெங்காயம்... மீண்டும் விற்பனை... இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் மிகப்பெரிய தொழிலதிபர் ஆகி விட்டான் அந்த ராகுல்.
இந்தச் சூழ்நிலையில் ராகுல் ஒரு மிக பெரிய தொழிலதிபர் என்பதால் ஒரு பல்பொருள் அங்காடியை திறந்து வைப்பதற்காக ராகுலை அழைக்க வந்தனர். அதற்கு ஒப்புக்கொண்ட ராகுலிடம் தங்களது ஈ-மெயில் முகவரியை தாருங்கள் எங்கள் கடையின் சிறப்பம்சங்களை அனுப்புகிறோம் என்று கேட்டனர்.
அதற்கு அந்த ராகுல் என்னிடம் ஈ-மெயில் முகவரி இல்லை என்று பதிலளிக்க, என்னது!.. ஈ-மெயில் இல்லையா?...ஈ-மெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா?... உங்களுக்கு மட்டும் ஈ-மெயில், இன்டர்நெட் எல்லாம் தெரிந்திருந்தால்?.... அம்மாடி! என்று ஆச்சரியமாக கேட்டார்.
அதற்கு ராகுல் சிரித்துகொண்டே"அதெல்லாம் தெரிந்திருந்தால் நான் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டு இருந்திருப்பேன்..............................இவ்வாறு முன்னேரியிருக்க மாட்டேன்" என்று பதில் கூறினான் ...-முற்றும்
நீதி : வாய்ப்புக்கள் விலகும்போது அதை நினைத்து கவலைப்படாதே எல்லாம் நன்மைக்கே! என்று தொடர்ந்து முயற்சி செய்... மிகப்பெரும் வெற்றி உனக்காக காத்திருக்கும்... -Civilian Sridhar
எங்களது மற்ற படைப்புகள்:
மற்றவை:
Very nice
ReplyDeleteநன்றி...
DeleteSuper...
DeleteAwesome sir
ReplyDeleteநன்றிகள் பல கோடி........
Delete