உயிர்வாழவாவது உதவி செய்! | Kutty Story | - Kutty Story

Comments

உயிர்வாழவாவது உதவி செய்! | Kutty Story |

Share This
   ஒரு ஊரில் ஒரு விவசாயி பண்ணைத் தொழில் செய்து வந்தார். பண்ணைக்கு சொந்தக்காரனும் அவனது மனைவியும் பண்ணையில் ஒரு கோழியும், ஒரு பன்றியும், ஒரு ஆடும் வளர்த்தனர்.அவர்களுக்கு தெரியாமல் அங்கு எலி ஒன்று வாழ்ந்து வந்தது.

   அதைக் கண்ட பண்ணைக்காரனுக்கு எலி அங்கே இருப்பது பிடிக்கவில்லை. ஒருநாள் பண்ணை காரனும் அவன் மனைவியும் சந்தைக்குப் போய் வரும் போது எதையோ காகிதத்தில் சுற்றி வாங்கி வந்ததை சுவற்றிலிருந்து எலி பார்த்தது. அந்த சாமான் ஒரு எலிப்பொறி என்று கண்டதும் திடுக்கிட்டு போனது.
   உடனே கோழியிடம் போய் "கோழியாரே, என்னை கொல்ல எலிப்பொறி வாங்கி வந்திருக்கிறார்கள் நான் என்ன செய்யட்டும்" என்று கேட்டது. கோழியோ "இது என் பிரச்சினையே இல்லை நானா பொறியில் மாட்டிக் கொள்ளப் போகிறேன்? உன் பிரச்சினையை உன்னிடமே வைத்துக் கொள்" என்று சொல்லி விட்டு தரையை கொத்த ஆரம்பித்து விட்டது கோழி.

   பிறகு எலி, பன்றியிடம் போய் முறையிட்டது. பன்றி அதைக் காதிலேயே வாங்கவில்லை. ஆட்டிடம் போனாள் அதுவும் போ...போ...எனக்கு வேறு வேலை இல்லையா? என்று துரத்தி விட்டது.
   எலியும் வேறு வழி தெரியாமல் தினமும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தன் வாழ்க்கையைத் தொடர்ந்தது.
 ஒருநாள் நடு இரவில் எலிப்பொறி பட்டென்று மூடும் சத்தம் கேட்டது. பண்ணைக்காரனின் மனைவி இருட்டில் தடவி கொண்டே என்னவென்று பார்க்க போனாள். பொறியில் ஒரு பாம்பின் வால் மாட்டி கிடந்ததை அறியாமல் பொறியில் கை வைக்கப் போய் அந்தப் பாம்பு அவளை கடித்து விட்டது. நச்சின் வீரியம் தாங்காமல் படுத்த படுக்கையாய் கிடந்தால் பண்ணைக்காரனின் மனைவி.
     வைத்தியன் வந்து பார்த்தான். அவளுக்கு கோழி சூப் வைத்து கொடுத்தால் ஒரு வேளை அவளுக்கு நச்சை எதிர்க்கும் சக்தி கூடலாம் என்று யோசனை சொன்னான். பண்ணைக்காரன் அன்றிரவே கோழியை அடித்து சூப் வைத்து மனைவிக்குக் கொடுத்தான்.
   மேலும் நாளுக்கு நாள் மனைவியின் உடல் நலம் குறைந்து கொண்டே போனது.உற்றார் உறவினர் எல்லாம் நலம் விசாரிக்க வந்து போய்க்கொண்டு இருந்தார்கள் அவர்களுக்கு சாப்பிடக் கொடுக்க ஏதும் இல்லை என்று ஒரு நாள் பன்றியை கசாப்பு போட்டு விட்டான் அந்த பண்ணைக்காரன்.
  நச்சின் கொடுமை தாங்க முடியாமல்  மனைவி இறந்து போனாள். அவளுடைய ஈமச் சடங்கிற்காக உற்றம் சுற்றம் எல்லாம் திரண்டு வந்திருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் சாப்பாடு போட காசும், தானியமும் கையில் இல்லை. வேறு வழியில்லாமல் பண்ணைக்காரன் அந்த ஆட்டையும் அடிக்க வேண்டியதாயிற்று.
     நீதி : கூட இருப்பவர்களுக்கு ஆபத்து என்றால் அதை அசட்டையாக புறம் தள்ளாதே! உனக்கான ஆபத்தும் அதில் ஒளிந்திருக்கக் கூடும்.
                     உயிர்வாழவாவது உதவி செய்!


எங்களது மற்ற படைப்புகள்: 

15 comments:

  1. Replies
    1. கதையை படித்து நீதிக்கேற்றவாரு உதவியமைக்கு மிக்க நன்றி!

      Delete
  2. இந்த கதையை படித்த பிறகாவது பிறர் மணம் புண் படாமல் உதவி என்று கேட்டவுடன் தட்டி கலிக்காமல் உதவி செய்யுங்கள்.......

    இந்த கதையை எழுதியவருக்கு மிக்க நன்றி.......

    ReplyDelete
    Replies
    1. நன்றிக்கு மிக்க நன்றி!

      Delete
  3. Replies
    1. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  4. Mohana
    அருமையான பதிவு

    ReplyDelete

Pages