அம்மானா சும்மா இல்லடா...! | Kutty Story | - Kutty Story

Comments

அம்மானா சும்மா இல்லடா...! | Kutty Story |

Share This
இந்தக் கதை கன்னி தளர்ந்து கன்றுக்குட்டியை பெற்ற அனைத்து கண்மணிகளுக்கும் சமர்ப்பணம்....

     ஒரு ஊரில் ஒரு தாய், அவளுக்கு இரண்டு குழந்தைகள், அவள் தன் இளைய  குழந்தை வயிற்றில் இருக்கும்போதே ஒரு சிறிய விபத்தில் கணவனை இழந்தவள். அந்தத் தாயின் சம்பாத்தியத்தில் தான் வீட்டு வாடகை, உணவு, குழந்தைகளுக்கு ஆடைகள் என அனைத்து தேவைகளும் செய்யவேண்டியிருந்தது. இவ்வாறு வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் போது,ஒருநாள் அவளின் இளையை குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, மருத்துவர் ஸ்கேன் எடுத்துப் பார்த்துவிட்டு குழந்தைக்கு ஒரு கிட்னி முற்றிலுமாக செயல் இழந்து விட்டது, மற்றொரு கிட்னியும் செயல் இழக்கும் நிலையில் உள்ளது. விரைவில் மாற்று கிட்னி பொருத்தாவிடில் குழந்தை உயிர் இழக்க நேரிடும் என்ற அவர் வார்த்தையை கேட்டதும் அவளின் தலையில் கல்லை தூக்கிப் போட்டது போல் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தாள். பின்பு அவள் தன் சுய நினைவை அடைந்து என் மகனுக்கு என் கிட்னியை தருகிறேன் என்று மருத்துவரிடம் சொல்ல அவர்களும் ஒத்துக் கொண்டு சில மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அந்த குழந்தைக்கு தன் தாயின் கிட்னியை பொருத்தினர்.
   அதன் பின் அந்த அறுவைச் சிகிச்சைக்காக கடன்வாங்கி இருந்த 10 லட்சம் ரூபாயை கேட்டு அந்த கடன் கொடுத்தவர் பணம் கொடுக்க முடியாததால் அவர் அந்த குழந்தையை தூக்கி  சென்றுள்ளார்.
     குழந்தையை மீட்க சென்ற அந்த தாயிடம் உன்குழந்தை வேண்டுமென்றால் கடனை திருப்பி கொடு அப்படியில்லையென்றால் அதோ! பார் தெரிகிறது தங்கமலை அங்கு ஒரு தங்க பாறை உள்ளது. அதை எடுத்து வா, எழுந்து போ, என்று ஆவேசத்துடன் கூறியுள்ளார், கடன் கொடுத்தவர். அதை அறிந்த அவ்வூர் இளைஞர்கள் அதனை எடுத்து வர முயற்சித்து மலையை ஏற தொடங்கினர்.
   அவர்களுக்குப் பின்னால் அந்த தாயும் சென்றாள். அது மிக செங்குத்தான மலை என்பதால் ஏற முடியாமல் தவித்த இளைஞர்கள் ஒரு மரத்தின் நிழலில் ஓய்வு எடுத்தனர். அந்தத் தாயார் சிறிதும் ஓய்வில்லாமல் செங்குத்தான மலை மீது ஏறி அந்த தங்க பாறையை எடுக்கும் போது ஒரு சிறிய கல் உருண்டு வந்து அவளின் தலையை தாக்கியதில் இரத்தம் கொட்டோ! கொட்டென்று கொட்டியது. அப்போது அவள் தனது முந்தானையின் ஒரு பகுதியை கிழித்து தன் தலையில் கட்டிக்கொண்டு தங்க பாறையை எடுத்து வந்து கடன் கொடுத்தவரிடம் கொடுத்து தனது குழந்தையை மீட்டு வந்தாள். அப்போது மலை அடிவாரத்தில் அமர்ந்திருந்த இளைஞர்கள் குழந்தையுடன் அந்தத் தாய் வருவதைப் பார்த்து.... "நாங்களே ஏற சிரமப்பட்ட மலை மீது பெண்ணாகிய தாங்கள் ஏறி சென்றுவிட்டீரே! எப்படி? என்று வியப்புடன் கேட்டார்கள்.
    அவள் அதற்கு தனது இடுப்பில் இருந்த குழந்தையைக் காட்டி இது உங்கள் குழந்தையல்ல...என் குழந்தை இதுதான் வித்தியாசம், என் உயிர் போனாலும் பரவாயில்லை என் மகன் பிழைக்க வேண்டுமென்று முயற்சித்தேன், தங்க பாறையை கைப்பற்றினேன், என் குழந்தையை மீட்டேன் என்று பதில் சொன்னாள்.
   வியப்படைந்த இளைஞர்கள் அந்த தாயிடம்... அம்மா என்னும் ஆருயிரை இன்று தான் உணர்ந்தோம் அம்மா... எங்கள் தாயை எவ்வளவோ கொடுமை படுத்தி விட்டோம்...இனி திருந்தினோம் என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு சென்றனர். அதன்பின் அந்தத் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தாள். -முற்றும்.

கண்களை மூடி பார்த்தாலும்....
கண்களைத் திறந்து பார்த்தாலும்.... கனவிலும் என் அன்னையே.....
 அவள் எப்போதும் நினைப்பது என்னையே...

என் மரணம் என் தாய் மடியில் என்றால்... அது மீண்டும் எனக்கு ஜனனம் தான்..

அனைத்து அம்மாக்களுக்கும் இவனின் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்....
                                                                                                                                        -Civilian Sridhar

5 comments:

Pages